×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குழந்தைகளுக்கு கொடுக்கும் சிரப்பில் "60 மில்லியில் 6 மில்லி மட்டும்தான்... ஆனால் 95% ஆல்கஹால் என்ன? உண்மையைப் போட்டுடைத்து பெற்றோர்களுக்கு அறிவுவுரை கூறிய தமிழக சுகாதாரத்துறை.!!!

குழந்தைகளுக்கான மருந்துகள் மற்றும் பாராசிட்டமால் சிரப்பில் ஆல்கஹால் கலக்கப்படுவதாக பரவும் வதந்திகளுக்கு தமிழக சுகாதாரத்துறை விளக்கம் அளித்து, பொதுமக்கள் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement

குழந்தைகளுக்கான மருந்துகள் மற்றும் பாராசிட்டமால் சிரப் மருந்துகளில் ஆல்கஹால் கலக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு தமிழக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. மருந்துகளில் பயன்படுத்தப்படும் ஆல்கஹால் பாதுகாப்பான அளவிலும், மருத்துவத் தரநிலைகளுக்கு உட்பட்டும் மட்டுமே சேர்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆல்கஹால் ஏன் பயன்படுத்தப்படுகிறது?

சில மருந்துக் கூறுகள் தண்ணீரில் எளிதில் கரையாததால், அவற்றை சரியான முறையில் கரைக்க ஆல்கஹால் கரைப்பானாக பயன்படுத்தப்படுவது மருத்துவத் துறையில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, 60 மில்லி மருந்துப் பாட்டிலில் சுமார் 6 மில்லி அளவிலேயே, அதாவது 10 சதவீதம் மட்டுமே ஆல்கஹால் பயன்படுத்தப்படுவதாக சுகாதாரத்துறை விளக்கியுள்ளது.

இதையும் படிங்க: மாணவர்களே.... 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதி வெளியாகிறது! ரிசல்ட் பார்க்க வேண்டிய இணையதளங்கள் இதோ.!!

‘95% ஆல்கஹால்’ என்ற லேபிளின் உண்மை என்ன?

மருந்துப் பாட்டில்களில் இடம்பெறும் “95% ஆல்கஹால்” என்ற குறிப்பை பலர் தவறாகப் புரிந்துகொள்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அது மருந்தின் மொத்த அளவில் உள்ள ஆல்கஹாலின் சதவீதம் அல்ல. மாறாக, தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட ஆல்கஹாலின் தூய்மையைக் (Purity) குறிக்கும் தொழில்நுட்ப தகவல் மட்டுமே என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிவுரை

சந்தையில் விற்பனை செய்யப்படும் அனைத்து குழந்தைகள் மருந்து தயாரிப்புகளும் தரக் கட்டுப்பாடுகள் மற்றும் கடுமையான ஒழுங்குமுறை விதிகளின் அடிப்படையில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப விவரங்களை தவறாகப் புரிந்துகொண்டு தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும் வதந்திகளை பொதுமக்கள் நம்பவோ, பகிரவோ கூடாது என்றும் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: BREAKING: ஷாக் நியூஷ்... நேற்று இரவு தமிழகத்தில் நிலநடுக்கம்...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tamil Nadu Health Department #பாராசிட்டமால் சிரப் #Alcohol in Medicines #குழந்தைகள் மருந்து #Health News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story