×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உஷார்..! இந்த காரணங்களால் கூட ஆண்மைக்குறைபாடு ஏற்படலாம்..! அதை எப்படி கண்டறிவது.?

Problems for men and how to find it

Advertisement

நாகரீகம் ஒருபுறம் வளர்ந்துகொண்டே போனாலும் அதனால் மனிதர்களுக்கு ஏற்படும் சிறு சிறு உடற்சார்ந்த பிரச்சனைகளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உடல் எடை, மனா அழுத்தம் இவற்றுடன் ஆண்மைகுறைபாடும் தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது.

பொதுவாக நரம்புகள் பலம் குறைந்து, தளர்ச்சி அடைந்து இல்லற வாழ்வில் முழு இன்பம் அடைய முடியாமல் போவதையே ஆண்மை குறைபாடு என்கிறோம். இந்த நிலை ஒருவருக்கு ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சில முக்கியமான காரணங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மனஅழுத்தம்:
இன்று பெரும்பாலானோருக்கு உள்ள பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது இந்த மனா அழுத்தம். மனஅழுத்தம் ஒருவருக்கும் அதிகமாக இருந்தாலும் கூட நரம்புது் தளர்ச்சி உண்டாகும். எனவே உங்களுக்கு மன அழுத்தம் அதிகம் இருந்தால் அதை சரியான முறையில் கையாள வேண்டும்.

விபத்து:
மனிதனின் உடலில் மிகவும் முக்கியமான அமைப்பாக கருதப்படுவது நரம்புமண்டலம். நோய்வாய்ப்பட்டதாலோ அல்லது விபத்தாலோ தண்டுவடத்தில் அடிபட்டால்கூட நரம்புத் தளர்ச்சி உண்டாகி, அதனால் ஆண்மைக்குறைபாடுஏற்பட்ட வாய்ப்பு உள்ளது.

குடி பழக்கம்:
இந்த நாகரிக உலகில் பலரும் குடிக்கு அடிமையாக உள்ளனர். இந்த குடிப்பழக்கம் பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்தாலும் ஆண்மை குறைபாடு ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது.

வியாதிகள்:
விஷக் காய்ச்சல் அல்லது அம்மை போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு அதனால் ஏற்படும் சில பக்க விளைவுகளால் கூட நரம்புத் தளச்சிஏற்பட்டு அதனாலும் ஆண்மை குறைபாடு ஏற்படலாம்.

தாம்பத்திய உறவின்போது ஆணுறுப்பு விரைவில் துவண்டு விடுதல் அல்லது விறைப்பு தன்மை இருந்தும் சரியான அளவில் விந்தணு வெளியேறாமலேயே இருப்பது போன்ற அறிகுறிகள் எல்லாம் நரம்புத் தளர்ச்சியின் காரணமாக ஏற்படவாய்ப்புள்ளது.

எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு உண்டு. ஆண்மை குறைபாட்டை பெரிய குறையாக கருதாமல் முறையான சிகிச்சை பெறுவதன் மூலம் இதனை சரி செய்ய முடியும். இதுவொரு குறைபாடுதான். நோய் அல்ல என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

ஊட்டச்சத்துக்கள் மிக்க உணவுகள், பாதாம், வால்நட் போன்ற பருப்பு வகைகள் ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆண்மைக்குறைபாடு நீங்கி, விந்தணு வீரியம் பெறும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#health tips
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story