காலை எழுந்ததும் குடிக்க வேண்டிய பானங்கள்! என்னென்ன தெரியுமா? இதில் கொட்டிக்கிடக்கும் பலன்கள்!
காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய ஆரோக்கிய பானங்கள், உடல் சுறுசுறுப்பு, செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எளிய வழிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
ஒரு நாளின் ஆரோக்கியத்தை தீர்மானிப்பது நாம் காலையில் எடுத்துக்கொள்ளும் முதல் பானமே. சரியான பானங்களை தேர்வு செய்தால் உடல் சுறுசுறுப்பாக செயல்பட்டு, நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கு உதவும்.
வெறும் தண்ணீர்
காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் சாதாரண தண்ணீர் அரை மணி நேரத்திற்குள் குடிப்பது சிறந்த பழக்கம். சூடுநீர் தவிர்த்து சாதாரண தண்ணீர் குடிப்பதால் அசிடிட்டி குறைந்து, செரிமானம் சீராகும்.
வெந்தய தண்ணீர்
முந்தைய இரவு குளிர்ந்த நீரில் வெந்தயத்தை ஊறவைத்து, மறுநாள் காலை தயிருடன் சேர்த்து குடிக்கலாம். தண்ணீருடன் சேர்த்து வெந்தயத்தை மென்று சாப்பிடுவது அல்லது மோருடன் கலப்பது தவிர்க்க வேண்டும். இது செரிமானத்தை மேம்படுத்தி உடலை சுத்திகரிக்க உதவுகிறது.
இதையும் படிங்க: உடல் எடையைக் சரசரவென குறைக்க வேண்டுமா? அப்போ காலையில் இந்த உணவை சாப்பிடுங்க! அப்பறம் பாருங்க ரிசல்ட்டை....!
எலுமிச்சை நீர்
தினமும் காலையில் தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் குடல் இயக்கம் சீராகி, உடல் உறுப்புகள் சுறுசுறுப்பாக இயங்கும். இது இயற்கையான Detox Water ஆக செயல்படுகிறது.
பூண்டு தண்ணீர்
பூண்டை இடித்து தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிப்பதால் ரத்த ஓட்டம் சீராகி, கல்லீரல் செயல்பாடு மேம்படும்.
அருகம்புல் பானம்
அல்சர் பிரச்சனை உள்ளவர்களுக்கு அருகம்புல் சாறு சிறந்தது. அருகம்புல்லை அரைத்து சாறு எடுத்து வெந்நீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
இஞ்சி சாறு
தோல் நீக்கிய இஞ்சியை அரைத்து சாறு எடுத்து, தேன் கலந்து குடிப்பதால் தேவையற்ற கொழுப்பு குறையும். மேலும் நுரையீரல் தொடர்பான நோய்களுக்கும் நிவாரணம் கிடைக்கும்.
நெல்லிக்காய் சாறு
காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடிப்பதால் உடலில் தேவையற்ற கொழுப்பு கரைந்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
இந்த எளிய பழக்கங்களை தினமும் பின்பற்றினால் உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, நாள் முழுவதும் உற்சாகமாக செயல்பட முடியும். உங்கள் காலை நேரத்தை ஆரோக்கியமான காலை பானம் மூலம் தொடங்குங்கள்.
இதையும் படிங்க: இரவில் குடித்தால் இவ்வளவு நன்மையா...!கல்லீரலை சுத்தப்படுத்தி நச்சுக்களை நீக்கும் மஞ்சள் தண்ணீர்! கொட்டிக்கிடக்கும் பலன்கள்!