இந்த ஒரு பொடி போதும்... கட்டாயம் சாப்பிடுங்க.. சூப்பர் டிப்ஸ் இதோ.!
Drumstick Leaf Powder: முருங்கை இலை பொடியை சாப்பிட உடல்நலம் மேம்படும்.
தினமும் நாம் முருங்கை பொடி சாப்பிட உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
பாலில் கலந்து குடிக்கலாம்:
Moringa Powder Benefits: கிராமப்புறங்களில் இருக்கும் வீடுகளில் முருங்கை மரம் என்பது இடம்பெற்று இருக்கும். இது தாவரமாக மட்டுமல்லாமல் மருந்தகமாக கவனிக்கப்பட்டது. தற்போது முருங்கை இலையில் பொடி செய்து மேலை நடுங்களுக்கு மோரிங்கா என்ற பெயரிலும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனை அவர்கள் பாலில் கலந்து குடிப்பது, உணவுடன் சேர்த்து சாப்பிடுவது என எடுத்துக்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: Green Banana: பச்சை வாழைப்பழம் கேட்டு வாங்கி சாப்பிடுங்க.. என்னென்ன நன்மைகள்? தெரிஞ்சிக்கோங்க..!
முருங்கை பொடி:
இதனை சூப்பர் போட என்றும் அழைக்கின்றனர். முருங்கை பொடியில் உடலுக்கு அத்தியாவசியமான வைட்டமின்கள் ஏ, சி, ஈ, பி இருக்கின்றன. இரத்த சோகையை விரட்டும் இரும்புசத்து, எலும்புக்கு வலுசேர்க்கும் கால்சியம் அதிகம் உள்ளன. பொழுதுபோக்குக்கு எனர்ஜி டிரிங்க் எனப்படும் பாட்டில் கேஸ் தண்ணீரை குடிப்பதற்கு பதில் முருங்கை பொடியை சாப்பிடலாம்.
உடலுக்கு நல்லது:
எப்போதும் தட்பவெப்ப நிலை மாறும்போது சளி, காய்ச்சல் போன்றவற்றில் இருந்து உடலை பாதுகாக்க முருங்கையின் ஆன்டி-ஆக்சிடன்ட் உதவும். உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறும். துரித உணவுகளால் ஏற்படும் ஜீரணக்கோளாறு, வயிற்றுஉப்பசம், மலச்சிக்கல் சரியாகும். முருங்கையின் நார்சத்து உடலுக்கு நல்லது. குடலின் இயக்கம் சீராகி செரிமானம் மேம்படும்.
மாரடைப்பு அபாயம் குறையும்:
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முருங்கைப் பொடி உதவுகிறது. இன்சுலின் சுரப்பை தூண்டி, ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை கட்டுப்படுத்தும். இதயத்தின் தமனியில் இருக்கும் அடைப்பை தடுக்கும். இரத்த அழுத்தத்தை சீராக்க உதவும். மாரடைப்பு அபாயத்தை குறைக்கும்.
இதையும் படிங்க: செரிமானம், உடல் எடை மட்டுமா... கோடையின் வரப்பிரசாதம் பப்பாளி.. அசத்தல் டிப்ஸ் இதோ.!