×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சிறுநீரை நீண்ட நேரம் அடக்கிவைக்கும் நபரா நீங்கள்?.. உங்களுக்குத்தான் எச்சரிக்கை செய்தி.!

சிறுநீரை அடக்கி வைக்கும் பழக்கம் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும். உடல் தரும் இயற்கை சமிக்ஞைகளை புறக்கணிக்காமல் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Advertisement

சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைப்பது உடலுக்கு ஆபத்தானதா? இதனால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஒவ்வொரு நபரும் சிறுநீர் கழிப்பது உடலில் இருக்கும் அதிகப்படியான நீரை வெளியேற்ற உதவுகிறது. சிறுநீர் மூலம் உடலுக்கு தேவையில்லாத நச்சுக்களும் வெளியேற்றப்படுகிறது. அதனை அடக்கி வைப்பதால் உடலின் இயற்கையான செயல்முறை பாதிக்கும் என்பதால் கவனமாக இருப்பது அவசியமாகும். 

அலட்சியம் செய்யாதீர்கள்:

சிலர் வேலை உட்பட பல்வேறு காரணத்தால் இந்த செயலை மேற்கொண்டு வரும் நிலையில், சிறுநீர் கழிப்பதை நிறுத்துவது ஆரோக்கியத்தை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். நமது உடல் செயல்பாடுகளில் வரும் சமிக்ஞையை கவனிக்காமல் இருந்தால் மிகப்பெரிய எதிர்கால சிக்கலையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 

இதையும் படிங்க: ஆயுளை மேம்படுத்தும்.. அன்றாட நடைப்பயிற்சி.! இதை கவனத்தில் கொள்ளுங்கள்.!

நோய் தொற்றுகளுக்கு வாய்ப்பு:

நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைப்பதால் சிறுநீர்ப்பையில் அழுத்தம் அதிகரித்து சிறுநீர்ப்பை தசையில் நோய் தொற்றுகள் ஏற்பட வழிவகை செய்யும். மேலும் பாக்டீரியாக்கள் வளரும். சிறுநீர்ப்பை சரியாக காலியாகும் திறனும் பாதிக்கப்படும். அடிவயிற்றில் வலி, அசௌகரியம் போன்றவையும் ஏற்படும். 

மருத்துவர்கள் கூறுவது என்ன?

இந்த பிரச்சனை நீண்ட நாட்கள் நீடித்தால் அது சிறுநீரகப் பிரச்சனைக்கு மிகப்பெரிய காரணமாகவும் அமையும். குடல் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற சமிக்ஞை கொடுத்ததும் அதனை இயற்கையாகவே வெளியேற்றி விடுவது நல்லது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். அதுபோல சிறுநீர் கழிக்கும் போது அசௌகரியம், எரியும் உணர்வு ஏற்படும் பட்சத்தில் மருத்துவரை அணுகுவது நல்லது.

இதையும் படிங்க: Warning: எலி கடித்தவுடன் என்ன செய்ய வேண்டும்?.. அலட்சியமாக இருக்காதீங்க.. உயிருக்கே உலை வைக்கும்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#holding urine #health tips #சிறுநீர் #urine health tips #Kidney health
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story