×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சிகரெட்டை விட டேஞ்சர்.. நுரையீரலை தாக்கி உயிரைப்பறிக்கும் ஊதுபத்தி.. உஷாரா இருங்க.!

ஊதுபத்தி புகை நுரையீரலை பாதித்து புற்றுநோய் போன்ற தீவிர உடல் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

வீட்டில் பூஜை மற்றும் நறுமணத்திற்காக வழக்கமாக பயன்படுத்தப்படும் ஊதுபத்தி, உடல்நலத்திற்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

வீட்டில் பூஜையின் போது உபயோகப்படுத்தப்படும் ஊதுபத்தி வெளிப்படுத்தும் நறுமணம் காரணமாக மன அமைதி ஏற்படும் என பலரும் எண்ணுகின்றனர். ஆன்மீக பக்தர்கள் ஊதுபதியின் நறுமணம் மூலம் தெய்வத்தின் வருகையை உணர முடியும் எனவும் தெரிவிக்கின்றனர். ஆனால் ஊதுபத்திகள் மூலம் உடல் நலத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு வரும் என்பது உங்களுக்கு தெரியுமா? 

நுரையீரல் பாதிப்பு:

ஆம்.  செயற்கையான பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் ரசாயனங்கள் கலந்த ஊதுபத்தி புகைப்பழக்கத்திற்கு ஈடானதாக கருதப்படுகிறது. அறிவியல் ரீதியாக கூறும் போது எப்படி புகைப்பழக்கம் நமது நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்துமோ, அதே போல ஊதுபத்தியின் புகையும் நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 

கெமிக்கல் நச்சுகள்:

சீனாவில் 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஊதுபத்தி புகையில் உள்ள துகள்கள் காற்றில் கலந்து மனித உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்துவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புகையில் மியூட்டாஜெனிக், ஜெனோ டாக்ஸிக், சைடோ டாக்ஸிக் போன்ற விஷத்தன்மையுடைய நச்சுகள் கலக்கப்படுவதாகவும், இதன் காரணமாக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஊதுபதியால் உடல்நல பிரச்சனைகள்:

சுவாச மண்டலத்திற்கு கேடு விளைவித்து நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், தொண்டை எரிச்சல், மூச்சு திணறல் உள்ளிட்டவைகளையும் ஏற்படுத்தும். இதன் காரணமாக சிலருக்கு தோல் ஒவ்வாமை, கண் எரிச்சல் உள்ளிட்டவையும் ஏற்படும் என எச்சரிக்கப்படுகிறது. இதனால் ஊதுபத்தி, சாம்பிராணி உள்ளிட்ட நறுமணம் தரும் செயற்கையான பொருட்களை உபயோகிக்க வேண்டாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Incense Stick #Agarbatti Dangers #ஊதுபத்தி #health tips #ஊதுபத்தி தீமைகள்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story