குழந்தையின் அழுகையை ஈசியாக நிறுத்த வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்!
குழந்தையின் அழுகையை ஈசியாக நிறுத்த வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்!
பெரும்பாலான தாய்மார்களுக்கு குழந்தையின் அழுகையை நிறுத்துவது என்பது பெரும் சவாலான காரியமாக இருக்கும். அதிலும் குறிப்பாக குழந்தையை எங்கேயாவது வெளியில் தூக்கி சென்றால் குழந்தை அழுவதை நிறுத்தாது. அதற்கு காரணமும் தெரியாமல் தாய்மார்கள் திணறுகின்றனர்.
குழந்தை பிறந்து முதல் 6 வாரங்கள் வரை ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை அழுவது இயல்பான ஒன்றுதான். பொதுவாக குழந்தைகளுக்கு தங்களுடைய உடலில் ஏற்படும் கோளாறு என்ன என்பது சொல்லத் தெரியாது என்பதால் எந்த கோளாறு ஏற்பட்டாலும் உடனே அழுகின்றனர்.
அதன்படி பசி, வயிற்று வலி, வாயு தொல்லை, அதிக குளிர்ச்சி, அதிக வெப்பம், வயிற்று வலி போன்ற காரணங்களால் குழந்தைகள் பெரும்பாலும் அழுகிறது. எனவே குழந்தைகள் எதற்காக அழுகின்றனர் என்று கண்டுபிடித்து அதனை உடனடியாக சரி செய்தால் குழந்தையின் அழுகையை உடனடியாக நிறுத்தி விடலாம்.
அதேபோல் காற்று குழந்தைகள் வயிற்றுக்கு சென்றாலும் குழந்தைகள் அழும். எனவே பால் கொடுத்தவுடன் குழந்தையை தோளில் சாய்த்தவாறு லேசாக தட்டி கொடுத்தால் காற்றில் வெளியேறிவிடும்.