×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் பூசணி கட்லெட் செய்வது எப்படி?..! இல்லத்தரசிகளே இன்றே செய்து அசத்துங்கள்..!!

உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் பூசணி கட்லெட் செய்வது எப்படி?..! இல்லத்தரசிகளே இன்றே செய்து அசத்துங்கள்..!!

Advertisement

வைட்டமின் ஏ சத்து அதிகமாக இருக்கும் பூசணியில் உணவுகளை நாம் தயாரித்து சாப்பிடலாம். இன்று பூசணிக்காயில் கட்லெட் செய்து சாப்பிடுவது எப்படி என தெரிந்துகொள்ளலாம்.

தேவையான பொருட்கள் : 

துருவிய பூசணிக்காய் - 600 கிராம் 
உருளைக்கிழங்கு - 2 
சோளமாவு - 4 கரண்டி 
அரிசி மாவு - 4 கரண்டி 
மிளகாய்த்தூள் - 2 கரண்டி 
மசாலா தூள் - தேவையான அளவு 
வெங்காயம் - 2 
பச்சை மிளகாய் - 4 
எலுமிச்சை சாறு - 2 கரண்டி  
எண்ணெய் மற்றும் உப்பு - தேவையான அளவு

செய்முறை : 

★முதலில் எடுத்துக்கொண்ட வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடிபொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். 

★பின் உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து, மசித்து வைத்துக்கொள்ளவும். துருவிய பூசணிக்காயை எடுத்து நீர் தெளித்து இட்லி வேகவைப்பது போல் பத்து நிமிடம் ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும். 

★அடுத்து பாத்திரத்தில் பூசணிக்காய் துருவல், மசித்த உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய், மசாலாத்தூள், மிளகாய்த்தூள், அரிசி மாவு, சோள மாவு, எலுமிச்சை சாறு, உப்பு போன்றவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கட்லெட்டுகளாக தனியே எடுத்து வைக்க வேண்டும். 

★இறுதியாக எண்ணெய் ஊற்றி சூடானதும், நாம் எடுத்து வைத்துள்ள கட்லெட்டுகளை  பொன்னிறமாக பொரித்தெடுத்தால் சுவையான பூசணிக்காய் கட்லெட் தயார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#பூசணிக்காய் கட்லெட் #pumpkin cutlet #health tips #Kitchen Corner #Ladies Corner
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story