அன்னாசி பழத்தில் சுவையான பாயசம் தயார் செய்வது எப்படி?.. ..!
அன்னாசி பழத்தில் சுவையான பாயசம் தயார் செய்வது எப்படி?.. ..!
நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பாயாசத்தில் பல வகையான பாயாசங்கள் இருக்கின்றன. இன்று அன்னாசி பழத்தில் பாயாசம் செய்வது எப்படி காணலாம்.
தேவையான பொருள்கள் :
அன்னாசிப்பழத் துண்டுகள் - 2 கப்
காய்ச்சிய பால் - 1 லிட்டர்
கன்டென்ஸ்டு மில்க் - 2 கப்
ஜவ்வரிசி - 1/2 கப்
பைனாப்பிள் எசன்ஸ் - 2 ஸ்பூன் நெய் நெய், முந்திரி, கிஸ்மிஸ் - தேவையான அளவு
செய்முறை :
★முதலில் எடுத்துக்கொண்ட அன்னாசி பழத்தை தோல் சீவி சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
★ஜவ்வரிசியை அலசி சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் ஒன்றரை கப் நீரூற்றி கொதிக்க ஆரம்பித்ததும் ஊறவைத்த ஜவ்வரிசியை சேர்த்து 5 முதல் 8 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
★பின்னர் அந்த நீரை வடிகட்டி ஜவ்வரிசியை குளிர்ந்த நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ளவும். பால் கொதிக்க ஆரம்பித்ததும் பாதியளவு அன்னாசி பழத்தை சேர்த்து கோதிக்க விட வேண்டும்.
★இதனை அடுத்து அலசி எடுத்த ஜவ்வரிசியை மூன்று நிமிடங்கள் வேகவைத்து கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
★பாயாசம் நன்றாக கெட்டியான பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு சிறிதளவு பைனாப்பிள் எசன்ஸ், பைனாப்பிள் துண்டுகள், நெய் ஊற்றி முந்திரி, திராட்சை ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டால் சுவையான அன்னாசிப்பழ பாயாசம் தயார்.