அப்டியே பளபளபளன்னு.. உங்க வீட்டு டைல்ஸ் மின்ன வேண்டுமா? சூப்பர் டிப்ஸ்.!
Health Tips: வீட்டின் கழிவறை டைல்ஸ்களை சுத்தம் செய்யும் பணி மிகவும் கடினமானது.
பாத்ரூம் டைல்ஸ் பளிச்சென மின்ன வேண்டும் என்றால் கீழ்காணும் யுக்திகளை முயற்சித்து பார்க்கலாம்.
அழகாக்கலாம்..
வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாத்ரூமில், டைல்ஸில் கடினமான கறைகள் படிந்து இருக்கும். இது உப்புக்கறையாக இருக்கும். இவ்வாறான கறைகளை அகற்ற வீரியம் கொண்ட ரசாயனத்தை பெரும்பாலும் பயன்படுத்துவோம். ஆனால், அதற்குப்பதில் வீட்டில் இருக்கும் சமையல் பொருட்களிலும் அதனை அழகாக்கலாம். அதுகுறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
இதையும் படிங்க: ஷாக் நியூஷ்! அழகா? ஆரோக்கியமா? கண்ணுல வச்ச மை, கடைசில ஆபரேஷன்ல கொண்டு போயிடுச்சே...! காஜல் பிரியர்களே மிஸ் பண்ணாம பாருங்க...!!!
வினிகர்:
ஒரு கப்பில் பேக்கிங் சோடா, வெள்ளை வினிகர், சோப்பு திரவம் சேர்த்து கலவையை உருவாக்க வேண்டும். இந்த கலவை டைல்ஸ் மற்றும் கறைகள் உள்ள இடத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊறியபின் பிரஷ் கொண்டு தேய்க்க அழுக்குகள் நீங்கும். மேலும், சூடான நீர் கொண்டு அதனை சுத்தம் செய்யும்போது கிருமிகளும் நீங்கி டைல்ஸ் பளிச்சிடும். இறுதியாக எலுமிச்சை சாறு கலந்து துடைப்பது நல்ல நறுமணம் தரும்.
பாசி உள்ளதா?
வீட்டின் குளியலறையில் இருக்கும் டைல்ஸில் இருக்கும் பாசி, உப்புக்கரையை அகற்ற, பேக்கிங் சோடா, வினிகர் உபயோகம் செய்யலாம். இது சேர்த்து கலவை உண்டாக்கி 30 நிமிடம் ஊறவைத்து பின் சுத்தம் செய்ய நல்ல பலன் கிடைக்கும். இறுதியில் சூடான நீர் கொண்டு சுத்தம் செய்யலாம்.
இதையும் படிங்க: வயிற்று பிரச்சனை இருக்குதா? கட்டாயம் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க..!