காலை டிபனுக்கு ஆரோக்கியமான அசத்தல் உணவுகள்.. சூப்பர் டிப்ஸ் இதோ.!
Breakfast Tips: அரிசி மாவு தோசைக்கு பதிலாக ராகியை உப்புமா, ரொட்டி செய்து சாப்பிடலாம்.
ராகி எலும்பு ஆரோக்கியம், ரத்தசோகை, நீரிழிவு நோய்க்கு நல்லது. இதில் விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடலாம்.
Ragi Breakfast Recipe: கேப்பை, கேழ்வரகு, ராகி என அறியப்படும் உணவுப்பொருள் பல்வேறு சத்துக்களை கொண்டது ஆகும். இதில் இருக்கும் புரதம், இரும்புசத்து, கால்சியம், நார்சத்து, அமினோ அமிலம் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ரத்தசோகையை சரிசெய்யவும், நீரிழிவு நோய்க்கும் மிகப்பெரிய நன்மையை வழங்குகிறது.
ராகியை வைத்து பலரும் பொதுவாக அரிசி-உளுந்து மாவில் செய்வதுபோல தோசை சுடுவார்கள். ஆனால், ராகியை பல்வேறு வகையான உணவுகளை செய்யலாம். இது ராகி பிடிக்காத குழந்தைகளையும், பெரியவர்களையும் சாப்பிட வைக்கும் உக்தியாகவும் கவனிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: பிசைந்த கோதுமை மாவை ஃப்ரிட்ஜில் வைப்பது சரியா?.. கவனம் மக்களே.!
ராகி உப்புமா:
ராகி மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், கடலைப்பருப்பு, தாளிப்பு சேர்த்து தயாரிக்கப்படும் ராகி உப்புமா சுவையானது. விருப்பம் இருப்பவர்கள் பொட்டுக்கடலை சட்னி, தக்காளி சட்னியுடன் உணவை சாப்பிடலாம். இதனை தயார் செய்ய 10 முதல் 15 நிமிடங்கள் போதுமானது.
ராகி ரொட்டி:
சப்பாத்தியைப்போல ராகியை செய்யப்படும் ரொட்டிக்கு ராகி மாவு, வெங்காயம், பொடியாக நறுக்கிய மிளகாய், உப்பு, நறுக்கிய தேங்காய்துண்டு, கேரட், கொத்தமல்லித்தழைகள் வேண்டும். சப்பாத்திக்கு மாவு பிசைவது போல இல்லாமல் தளர்வாக பிசைந்து சப்பாத்தி போல தேய்த்து ராகி ரொட்டி செய்யலாம். சட்னி இல்லாமல் கூட இதனை சாப்பிட்டுவிடலாம். இந்த ரொட்டியில் காய்கறிகளை தவிர்த்து வெல்லம் சேர்த்தால் இனிப்பு ராகி ரொட்டி தயார்.
இதையும் படிங்க: கோடையின் வரம் தயிர் சாதம்.. டேஸ்டியாக செய்வது எப்படி?