ரமலான் நோன்பு வைக்கும் போது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இதைப் பின்பற்றுங்கள்.!!
ரமலான் நோன்பு வைக்கும் போது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இதைப் பின்பற்றுங்கள்.!!

ரமலான் மாதம் இஸ்லாமியர்களுக்கு புனிதமான மாதமாகும். இந்த மாதத்தில் ஒவ்வொரு இஸ்லாமியரும் அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பு உணவு சாப்பிட்டு பகல் பொழுது முழுவதும் உணவு உண்ணாமல் நீர் அருந்தாமல் நோன்பு இருப்பார்கள். ரமலான் மாதத்தில் ஒவ்வொரு இஸ்லாமியரும் கஷ்டப்படும் ஏழைகளுக்கு ஜக்காத் உதவியும் வழங்குவார்கள். தற்போது அதிக கோடை காலம் நிலவி வருவதால் ரமலான் மாதத்தில் பின்வரும் குறிப்புகளை பின்பற்றி தங்களது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
நோன்பு ஆரம்பிக்கும் முன்னரும்,பின்னரும் தாகம் எடுக்கவில்லையென்றால் கூட தேவையான நீரை அருந்தவும். உடலை வறட்சியாக்கும் கார்பனேட் பானங்களை தவிர்க்கவும். உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்துக் கொள்ளவும். நோன்பு முடித்த பிறகு வகை வகையான உணவுகளை எடுத்துக்கொள்ளவும். அதில் நார்ச்சத்து, புரதம் இதர வைட்டமின் மற்றும் மினரலஸ் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். துரித உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்ளாமல் பழம், காய்கறிகள், இறைச்சி போன்ற ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளவும்.