வெங்காயத்தை இரண்டாக வெட்டி அந்த இடத்தில் வைத்தால் ஒரே இரவில் பல நன்மைகள் கிடைக்குமாம்!
Health benefits of onion in tamil
நமக்கு பல்வேறு நன்மைகளைத் தரும் உணவுப் பொருட்களில் ஒன்று வெங்காயம். வெங்காயம் உணவில் மட்டுமில்லாது நமது உடல் ஆரோக்கியத்திற்கும் பல்வேறு விதங்களில் நன்மை தருகிறது.
நமது உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க வெங்காயம் மிகவும் பயன்படுகிறது. தலைமுடி கொட்டும் பிரச்சனை உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து வர முடி உதிர்வது நின்று அந்த இடத்தில் மீண்டும் முடி வளரும்.
தலையில் பொடுகு பிரச்சனை உள்ளவர்கள் வெங்காயத்தை தேய்த்துவந்தால் பொடுகுத் தொல்லை மறைந்துவிடும்.
மேலும் வெங்காயத்தை இரண்டு துண்டுகளாக வெட்டி இரவில் தூங்கும் போது நமது பாதத்தில்வைத்துவந்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.
வெங்காயத்தை இவ்வாறு நமது பாதத்தில் வைப்பதால் நமது உடலில் இருக்கும் நச்சுக்கள் உறிஞ்சப்படுகிறது, மேலும் ரத்தம் சுத்தம் செய்யப் படுகிறது. காய்ச்சல் இருந்தால் விரைவில் குணமாக இந்த முறை பயன்படுகிறது.
வெங்காயத்தை இரண்டாக வெட்டி அதனை பாதத்தின் அடியில் வைத்து காலுறை அணிந்துகொள்ளவும். ஒரு நாள் இரவு அப்படியே விட்டு விடுங்கள்.. இதே போன்று சில இரவுகள் செய்து வந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.