மருத்துவம் நிறைந்த கருவேப்பிலையின் அற்புத நன்மைகள்!
மருத்துவம் நிறைந்த கருவேப்பிலையின் அற்புத நன்மைகள்!
கருவேப்பிலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதன்படி கருவேப்பிலையில் ஆன்டி ஆக்சிடென்ட்கள், பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு போன்ற பண்புகள் அடங்கியுள்ளது.
எனவே கருவேப்பிலை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். கருவேப்பிலையில் உள்ள ஆன்டி ஆக்சிடெண்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உடலை பல்வேறு தொற்று நோய்களிலிருந்தும், கிருமிகளிலிருந்தும் பாதுகாக்கிறது.
கருவேப்பிலையில் உள்ள குரோமியம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
கருவேப்பிலையில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும், கருவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
அதேபோல் கறிவேப்பிலையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் வாய் துர்நாற்றத்தை போக்கி ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
கறிவேப்பிலியை உணவில் சேர்க்கும் அல்லது பச்சையாகவும் என்று சாப்பிடலாம். அதன்படி ஒரு நாளைக்கு 20 முதல் 30 கருவேப்பிலை இலையை சாப்பிடலாம்.