உங்க உச்சந்தலையில் இவ்வாறான பிரச்சனை இருக்கா? கவனிச்சு பாருங்க கொஞ்சம்.. வித்தியாசம் இதுதான்.!
பொடுகு, உச்சந்தலை வறட்சி வெவ்வேறு விஷயங்கள் ஆகும்.
உடலின் உட்புற ஈரப்பதம் இல்லாதது மற்றும் சில கவனக்குறைவாக செயல்பாடுகள் காரணமாக உச்சந்தலை அரிப்பு / வறட்சி ஏற்படும்.
தலையில் எண்ணெய் தடவிய பின்னர், விலையுயர்ந்த ஷாம்பு பயன்படுத்தினாலும் உச்சந்தலை அரிப்பு இருக்கிறதா? இதனை பலரும் பொடுகு என நினைக்கின்றனர். இதற்காக பொடுகு சரிசெய்யும் பொருட்களையும் பயன்படுத்துவதால் நிலைமை மோசமாகிறது. உண்மையில் பொடுகு, உச்சந்தலை வறட்சி என்பது வெவ்வேறானது ஆகும். உச்சந்தலை வறட்சிக்கு உடலின் ஈரப்பதம் இல்லாதது முக்கிய காரணம் ஆகும்.
காரணங்கள்:
உடலில் இருக்கும் நீர்ச்சத்து குறைபாடு சருமத்தை நேரடியாக பாதிக்கும் என்பதால், உச்சந்தலை வறட்சிக்கு காரணமாக அமையும். தலையில் அரிப்பு ஏற்படும்போது சொறிவதால் சிறிய காயம், எரிச்சல், செதில் உதிர்வு இருக்கும். மலிவு விலையில் கிடைக்கும் ரசாயனம் நிறைந்த ஷாம்புகளை பயன்படுத்தினாலும் இயற்கையான ஈரப்பதம் நீங்கும். அதிக சூடுள்ள நீரில் குளிப்பது உச்சந்தலையில் திரவ அடுக்கை சிதைக்கும். கால்சியம், மெக்னீசியம் நிறைந்த கனிம நீரில் குளிப்பது உச்சந்தலையில் படலத்தை உருவாக்கி வறட்சியை ஏற்படுத்தும். வயது முதிர்ந்த பின் உடலின் எண்ணெய் சுரப்பிகள் செயல்படாது என்பதால் வறட்சி அதிகமாகும். நாம் சாப்பிடும் உணவில் ஒமேகா 3, துத்தநாகம், வைட்டமின் பி, ஈ குறைவாக இருப்பினும் உடலின் ஈரப்பதம் கேள்விக்குறியாகும்.
இதையும் படிங்க: #Breaking: கழுத்து எலும்பு உடைக்கப்பட்டு., +2 மாணவி வன்கொடுமை கொலை.. பிரேத பரிசோதனையில் ஷாக் தகவல்.!
தீர்வுகள்:
இவ்வாறான பிரச்சனைகளை தவிர்க்க நாம் முடிந்தளவு சல்பேட் இல்லாத ஷாம்புவை தேர்வு செய்யலாம். அடிக்கடி தலைமுடியை கழுவாமல் இருக்க வேண்டும். வாரம் 2 முறை மட்டுமே ஷாம்பு பயன்படுத்துவது நல்லது. தலைக்கு எண்ணெய் வைப்பது, மசாஜ் செய்வது நல்லது. தலையில் ஊற்றப்படும் நீர் வெதுவெதுப்பு அல்லது குளிர்ந்த நிலையில் இருப்பது நல்லது. உணவில் வால்நட், ஆளி விதை, முட்டை, கீரை, பூசணி விதை சாப்பிடலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகள் வேண்டாம். சந்தேகம் / பாதிப்புகள் இருப்பின் தோல் மருத்துவரை நாடலாம்.
இதையும் படிங்க: Madurai News: அலங்காநல்லூரில் அட்டூழியம் காட்டிய தெருநாய்கள்.. 15 பேர் அலறி மருத்துவமனைக்கு ஓட்டம்.. செவிலியர்கள் சொன்ன ஷாக் தகவல்.!