தலை முடி ஆரோக்கியத்தை அதிகரிக்க என்ன செய்யலாம்? அசத்தல் டிப்ஸ் இதோ.!
தலை முடி ஆரோக்கியத்தை அதிகரிக்க என்ன செய்யலாம்? அசத்தல் டிப்ஸ் இதோ.!

இன்றுள்ள இளம் தலைமுறை ஆரோக்கியம் இல்லாத உணவுகள் காரணமாக, பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறது. இதனால் முடி உதிர்வு, வறட்சியான முடி உட்பட பிரச்சனைகளை எதிர்கொண்டு, கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை எந்த விதமான அறிவுரை, ஆலோசனை இன்றி பயன்படுத்துகிறது. இதனால் உரோமத்தின் ஆரோக்கியமும் கேள்விக்குறியாகிறது.
தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வெங்காயம் நல்ல தீர்வை வழங்கும். வீட்டில் அன்றாடம் பயன்படுத்தப்படும் வெங்காயம் கொண்டு மாஸ்க் தயாரித்து முடியின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.
வெங்காயம் + கற்றாழை
வெங்காயத்தில் நிறைந்துள்ள கந்தக சத்து, உச்சந்தலையை சுத்தம் செய்யவும், முடியின் வளர்ச்சிக்கு ஊக்குவிக்கவும் உதவி செய்கிறது. இதனால் உச்சந்தலை ஆரோக்கியம் மேம்படும். வைட்டமின் சி, பி9 மற்றும் பி6, பொட்டாசியம் சத்துக்கள் பூஞ்சை வளர்ச்சி, தொற்றுநோய்க்கு எதிராக போராடும். வெங்காய சாறு அல்லது வெங்காய எண்ணெய் நல்ல பலனை தரும்.
2 கரண்டி கற்றாழை ஜெல், 2 கரண்டி வெங்காய சாறு சேர்த்து கலந்து முடியில் தேய்த்து 30 நிமிடங்களுக்கு பின் முடியை கழுவினால் முடி ஆரோக்கியம் அதிகரிக்கும். தேங்காய் எண்ணெயுடன் வெங்காய சாறு கலந்து தேய்க்க, முடி இழைகள் நீரோட்டம் அடையும்.
முடியில் அலர்ஜி எதிர்ப்பு பண்பை ஊக்குவிக்க இஞ்சி - வெங்காய சாறு சமமான அளவு கலக்கி தலைமுடிக்கு தேய்த்து பின் குளிக்கலாம்.