எச்சரிக்கை.. அரிசியில் கலக்கப்படும் பிளாஸ்டிக்.. போலி அரிசியை கண்டுபிடிக்க எளிய டிப்ஸ் இதோ.!
போலியான அரிசிகளை கண்டுபிடிப்பது எப்படி? என இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
அன்றாட உணவுப் பொருட்களில் கலப்படம் அதிகரித்து வரும் நிலையில், அரிசியிலும் போலியான மற்றும் பிளாஸ்டிக் துகள்கள் கலக்கப்படுவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தற்போதைய காலகட்டத்தில் வீட்டு உபயோக பொருட்கள், உணவுப் பொருட்கள் என அன்றாட தேவைக்கான அனைத்திலும் ரசாயனங்கள் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவைகளில் பெயிண்ட் அடிக்கப்பட்டு புதியது போலவும் காண்பிக்கப்படுகிறது. அந்த வகையில் சமீப காலமாக சோறு சமைக்க பயன்படுத்தப்படும் அரிசியிலும் போலியானவை, பிளாஸ்டிக் அரிசிகள் போன்றவை கலக்கப்பட்டு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஸ்டார்ட் பூசப்பட்டு விற்பனை:
இது போன்ற போலியான அரிசிகளை சாப்பிடுவதன் மூலம் செரிமான கோளாறுகள் ஏற்படும். குறிப்பாக செயற்கையான பிளாஸ்டிக்குகள் கொண்டு தயாரிக்கப்படும் அரிசிகள் பார்ப்பதற்கு உண்மையான அரிசியைப் போல இருக்கும். சாப்பிட்டாலும் எந்த வித்தியாசமும் இருக்காது. ஊட்டச்சத்தம் இருக்காது. அடுத்ததாக அரிசியின் எடையை அதிகரிக்க ஸ்டார்ச் பூசப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: கலப்பட வெல்லத்தை கண்டுபிடிப்பது எப்படி?.. வீட்டிலேயே எளிய முறையில் கண்டறிய டிப்ஸ்.!
அரிசியில் கற்கள்:
சில இடங்களில் அரிசியில் கற்கள், சிறிய துகள்கள் சேர்த்து அதன் எடையும் அதிகரிக்கப்படுகிறது. இதன் காரணமாக மூச்சுத்திணறல் போன்றவையும் ஏற்படும். உண்மையான அரிசிகளிலிருந்து போலியான அரிசிகள் வித்தியாசப்படும் என்பதால் அதனை எளிதில் கண்டறியலாம். அதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அரிசி நீரில் மூழ்கும் அளவு ஊற வைக்க வேண்டும். சிறிது நேரத்தில் உண்மையான அரிசி நீருக்குள் சென்று விடும்.
போலி அரிசியை எளிதில் கண்டுபிடிக்கலாம்:
ஆனால் பிளாஸ்டிக் அரிசிக்கு அந்த தன்மை கிடையாது. இதனால் நீரின் மேலே மிதக்கும். அதுபோல ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அரிசியை வறுக்கும் பட்சத்தில் பிளாஸ்டிக் அரிசியிலிருந்து ரசாயன வாசனை வரும். நாம் அரிசியை தேய்க்கும் பட்சத்தில் கரடு முரடாக உணர்ந்தால் அது உண்மையான அரிசியாக கருதப்படுகிறது. போலியான அரிசி ஸ்டார்ச் பூசப்பட்டு இருப்பதால் மென்மையாக இருக்கும். உடல் நலத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என நினைத்தால்
FSSAI அல்லது ISO முத்திரை உள்ள அரிசிகளை வாங்குவது நல்லது.
இதையும் படிங்க: சிகரெட்டை விட டேஞ்சர்.. நுரையீரலை தாக்கி உயிரைப்பறிக்கும் ஊதுபத்தி.. உஷாரா இருங்க.!