×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உங்க குழந்தை செய்யும் சின்னச்சின்ன விஷயத்துக்கும் கத்துறீங்களா? பெற்றோர்களே தெரிஞ்சிக்கோங்க.!

Child Care Tips: குழந்தைகள் நம்மிடம் உண்மையை கூறாமல் இருந்தால், அவர்களிடம் கோபம் அடையாமல் கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றி பாருங்கள்.

Advertisement

அப்பா-அம்மா கோபம் அடைவார்கள் என்ற பயத்தில் குழந்தைகள் பொய்சொல்வது இயல்பானது. ஆனால், சிறிய தவறுக்கும் நாம் அதிகம் கண்டிப்பது அதனை அதிகரிக்கச் செய்யும். குழந்தை வளர்ப்பின் முக்கிய விஷயங்கள் குறித்து இன்று தெரிந்துகொள்ளுங்கள்.

அதிக சத்தம், கண்டிப்பது வேண்டாம்:

தாய்-தந்தையாக இருப்பவர்கள் தங்களின் அன்றாட கடமையுடன் குழந்தைகளையும் கவனிக்க வேண்டியிருப்பதால், அவர்கள் பொய்சொன்னாலோ அல்லது சொல்லும் பணிகளை செய்ய தவறினாலோ அதிகம் கோபம் அடைந்து கத்துவது, தண்டிப்பது போன்றவற்றை செய்கிறார்கள். நிபுணர்களின் கூற்றுப்படி, பெற்றோரின் இந்த செயல்கள் பிள்ளைகளுக்கு உண்மையை எப்போதும் பேச கற்றுக்கொடுப்பது இல்லை. பெற்றோரின் கோபத்தை புரிந்துகொள்ளும் குழந்தைகள், கோபத்தை தவிர்க்க புத்திசாலித்தனமாக பொய்சொல்ல கற்றுக்கொள்கிறார்கள். 

இதையும் படிங்க: Cauliflower: காலிப்ளவர் வாங்கும்போது இந்த விஷயத்தை கவனிக்க மாந்துடாதீங்க.. இல்லத்தரசிகளே நோட் பண்ணுங்க.! 

ஆதரவாக இருங்கள்:

ஒருசில நேரங்களில் குழந்தைகள் தங்களின் பயம், மனஅழுத்தம், கவனத்தை ஈர்க்கும் ஆசையாலும் பொய் சொல்வார்கள். இதனால் குழந்தைகளை புரிந்துகொண்ட அதற்கேற்ப அன்பாக பேசினால், அவர்கள் படிப்படியாக தங்களின் உண்மையை சொல்லும் திறனை வளர்த்துக்கொள்வார்கள். குழந்தைக்கு முதலில் அச்சமற்ற சூழலை வழங்க வேண்டியது பெற்றோரின் கடமை ஆகும். தவறாக இருந்தாலும் அதை என்னிடம் சொல், அதனை சரி செய்துவிடலாம் அல்லது பின்வரும் நாட்களில் மாற்றிக்கொள்ளலாம் என ஆதரவாக இருக்க வேண்டியது பெற்றோர் தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இதுவே குழந்தைகளிடம் நம்பிகையை வளர்க்கும் ஆயுதம் ஆகும்.

நேரத்தை செலவிடுங்கள்:

தற்போதையை காலத்தில் பெறோர்கள் பணிகளில் முடங்கி கிடக்கின்றனர். குழந்தைகளுடன் அவர்களால் நேரத்தை செலவிட முடியவில்லை. இதனால் குழந்தைகள் பெற்றோரின் கவனத்தை ஈர்க்க தாங்களே பொய் சொல்லத் தொடங்குகிறார்கள். தினமும் அவர்களுடன் நேரத்தை செலவிடுவது முக்கியமானது ஆகும். பள்ளியில் என்ன நடந்தது? நண்பர்கள் எப்படி இருந்தார்கள்? அவர்களுடன் ஏதேனும் பிரச்சனையா? என கேட்க வேண்டும். நல்லதை பாராட்டி, தவறுகளை சுட்டிக்காட்டி புரிய வைக்க வேண்டும். ஒரு குழந்தை உண்மையை எடுத்துரைக்கும்போது, அது தவறாக இருப்பினும் கோபம் அடைவதற்கு பதில் நேர்மையை பாராட்டி, பின் தவறை சுட்டிக்காட்ட வேண்டும். அதே போல, குழந்தைகள் எப்போதும் பெரியவர்களை பார்த்தே கற்றுக்கொள்கின்றனர். பெற்றோர் சிறிய பொய்களை கூறினால், குழந்தைகளும் அதனை இயல்பு என நினைத்துவிடுவார்கள். குழந்தைகள் முன்பு பேசும்போது கவனமாக இருக்க வேண்டும்.
 

இதையும் படிங்க: ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களே.! கொஞ்சம் இதை கவனியுங்கள்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#health tips #Child Care Tips #பெற்றோர் குழந்தை நலன்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story