தினமும் இரவில் நான்கு பேரிச்சம் பழங்கள் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் பற்றி தெரியுமா?
Dates benefits and health tips

பழங்களிலேயே வித்தியாசமான சுவை கொண்டது பேரிச்சம்பழம். பொதுவாக இது அரேபிய நாடுகளில்தான் அதிகம் விளைகிறது. சிறந்த சத்துள்ள பேரிச்சம் பழங்கள் ஆப்ரிக்க, அரேபிய நாடுகளில் அதிகமாக விளைகிறது. இந்த பேரிச்சம்பழம் மனிதனின் பல்வேறு உடல் சுகவீனங்களை சரி செய்கின்றன. அதிக நார் சத்து கொண்ட பேரீச்சம்பழத்தில் உடலுக்கு நன்மை தரக்கூடிய பல்வேறு நல்ல விஷயங்கள் உள்ளன.
தினமும் இரவில் 4 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டுவிட்டு பின் ஒரு டம்ளர் பால் குடித்து வந்தால் போதும் இரத்தம் விருத்தி அடைவதோடு, உடலில் தெம்பும் கூடுகிறது. மேலும் உங்கள் உடலில் வலிமையும் கூடும். மூட்டு வலி, கர்ப்ப கால பிரச்சனை, குடல் பிரச்சனை, பார்வை பிரச்சனை உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு பேரிச்சம்பழம் தீர்வாக அமைகிறது.