×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

5 நிமிடத்தில் ரெடி.. ருசியான முட்டை வறுவல்.. சூடான சாதத்துடன் அசத்தலா இருக்கும்.!

5 நிமிடத்தில் ரெடி.. ருசியான முட்டை வறுவல்.. சூடான சாதத்துடன் அசத்தலா இருக்கும்.!

Advertisement

தேவையான பொருட்கள் :

முட்டை – 4
எண்ணெய் – சிறிதளவு
சீரகம் – சிறிதளவு
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
கருவேப்பிலை – சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது – 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/4 ஸ்பூன்
மல்லித்தூள் – 1/4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகுத்தூள் – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு.

செய்முறை :

நான்கு முட்டைகளை வேக வைத்து தோல் நீக்கி எடுத்துக் கொள்ளவும். அதன் பின் அவற்றை நீளவாக்கில் அல்லது நமக்கு தேவையான ஷேப்பில் கட் செய்து வைத்துக் கொள்ளவும்.

இதையும் படிங்க: ஹோட்டல் ஸ்டைல் மசாலா முட்டை பஜ்ஜி.. மாலை நேர ஸ்நாக்ஸ் ரெசிபி.! 

ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, அதில் சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் ஆகியவை தலா கால் ஸ்பூன் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். அடி பிடிக்காமல் 3 ஸ்பூன் அளவு தண்ணீர் சேர்த்து கிளறவும்.

மசாலா நன்றாக கலந்ததும், கட் செய்து வைத்திருக்கும் முட்டையை சேர்த்து மெதுவாக கிளறவும். இறுதியாக மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

இப்போது சூப்பரான சுவையான முட்டை பொரியல் ரெடி.!

இந்த பொரியலை வெறும் சாதத்துடன் கலந்தும் சாப்பிடலாம். அல்லது ரசம் சாதம் அல்லது தயிர்சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டாலும் மிகவும் ருசியாக இருக்கும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#egg fry #boiled egg fry
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story