ஹோட்டல் ஸ்டைல் மசாலா முட்டை பஜ்ஜி.. மாலை நேர ஸ்நாக்ஸ் ரெசிபி.!
வீட்டிலேயே அசத்தல் சுவையில் மசாலா முட்டை பஜ்ஜி செய்வது எப்படி? என இந்த பதிவில் காணலாம்.
Masala Egg Bajji: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் மசாலா முட்டை பஜ்ஜி எப்படி செய்வது? என காணலாம்.
ஒவ்வொரு நாளும் வீட்டில் உள்ள குழந்தைகளும், பெரியவர்களும் வித்தியாசமான உணவுகளை எதிர்பார்ப்பது உண்டு. குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் முதலில் கேட்பது தின்பண்டம் தான். பெற்றோர்கள் குழந்தைகளின் உடல்நலனை கருத்தில் கொண்டு தின்பண்டங்களை கடையில் வாங்கி கொடுக்காமல் நிமிடங்களில் வீட்டிலேயே செய்து அசத்தலாம். அந்த வகையில் சுவையான மசாலா முட்டை பஜ்ஜி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
முட்டை - மூன்று
பெரிய வெங்காயம் - மூன்று
கடலை மாவு - கால் கப்
அரிசி மாவு - மூன்று ஸ்பூன்
மிளகாய் தூள் - இரண்டு ஸ்பூன்
பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கியது ஒன்று
மஞ்சள் தூள் - சிறிதளவு
கரம் மசாலா - அரைக்கரண்டி
மிளகுத்தூள், மல்லித்தூள் - கால் கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி - பொடியாக நறுக்கியது
உப்பு - தேவையான அளவு
இதையும் படிங்க: கிராமத்து சுவையில் மத்தி மீன் குழம்பு.. வீட்டிலேயே நாவூற செய்து அசத்துங்கள்.!
செய்முறை:
- முதலில் எடுத்துக்கொண்ட பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகுத்தூள், மல்லித்தூள், இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு பிசைய வேண்டும்.
- வெங்காயத்திலிருந்து தண்ணீர் வரும் என்பதால் மாவுக்கு தேவைப்படும் பட்சத்தில் தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.
- சிறிது தளர்வுடன் மாவை பிசைந்து மாவின் நடுவில் பாதியாக நறுக்கிய முட்டையை வைத்து உருண்டை பிடித்து, எண்ணெய் சூடானதும் கடாயில் இட்டு எடுத்தால் சுவையான முட்டை பஜ்ஜி தயார்.
இதையும் படிங்க: செட்டிநாடு ஸ்டைல் காளான் தொக்கு.. சாதம், சப்பாத்திக்கு செம்ம காம்போ.!