தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

துளி கூட கசப்பு இல்லாமல் பாகற்க்காயில் ஐஸ்கிரீம் செய்வது எப்படி தெரியுமா? டேஸ்ட் பிடிச்சா அப்புறம் விடவே மாட்டிங்க...

பாகற்க்காயில் ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்பதைப் பாருங்கள். இந்த சுவையான மற்றும் ஆரோக்கியமான ரெசிபி சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

bitter-gourd-ice-cream-recipe-benefits Advertisement

பாகற்க்காயில் ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்பதைப் பாருங்கள். இந்த சுவையான மற்றும் ஆரோக்கியமான ரெசிபி சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

பாகற்க்காய் என்றால் உடனே மனதில் வரும் சுவை தான் கசப்பு. அதனால்தான் பலர் அதை தவிர்க்கிறார்கள். குறிப்பாக குழந்தைகள் இதை விரும்பவே மாட்டார்கள். ஆனால் இந்த கசப்பான பாகற்க்காயில் ஐஸ்கிரீம் செய்யலாம் என்பது ஒரு புதிய தகவலாக இருக்கலாம்.

இந்த ரெசிபி உங்களுக்குள் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், இது உண்மையாகவே சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். பாகற்க்காய் நன்மைகள் சொல்லி முடிவதில்லை. அதிலும் சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு நன்மைதரும் உணவு. இனி ஐஸ்கிரீம் சாப்பிட முடியாது என வருந்தும் அவர்களுக்கு இது சிறந்த மாற்று தேர்வாக அமையும்.

பாகற்க்காய் ice cream

இதில் பாகற்க்காய் ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பாகற்க்காய் – 2

டூட்டி ஃப்ரூட்டி – 2 ஸ்பூன்

உப்பு – சிறிதளவு

பால் – 1 கப்

ஃபிரஷ் கிரீம் – 1 கப்

பால் பவுடர் – 1 கப்

கண்டன்ஸ்ட் மில்க் – ½ கப்

ஐஸ்கிரீம் செய்வதற்கான செய்முறை

1. முதலில் பாகற்க்காயை நன்றாக சுத்தம் செய்து விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும்.

2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் உப்பை சேர்த்து கொதிக்கவிட்டு அதில் பாகற்க்காயை சேர்க்க வேண்டும். இதை நான்கு தடவைகள் செய்ய வேண்டும். இதனால் கசப்பு குறையும்.

இதையும் படிங்க: அடடே.. பிஸ்கட்டில் உள்ள துளைகளுக்கு காரணம் இதுதானா?.. சுவாரஸ்ய தகவல்.!!

3. வெந்த பாகற்க்காயை ஆறவைத்து வைக்கவும்.

4. மிக்ஸியில் பால், ஃபிரஷ் கிரீம், பால் பவுடர் சேர்த்து நன்றாக அடிக்கவும்.

5. அதனுடன் கண்டன்ஸ்ட் மில்க் மற்றும் வெந்த பாகற்க்காய் சேர்த்து மீண்டும் அடிக்கவும்.

6. தயார் கலவையை ஐஸ்கிரீம் மெட்டலில் ஊற்றி, 8 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து கொள்ளவும்.

7. ஃபிரீஸிலிருந்து எடுத்து, மேலே டூட்டி ஃப்ரூட்டி தூவி பரிமாறுங்கள்.

 

ஆரோக்கியமும் சுவையும் கொண்ட ஐஸ்கிரீம்

இந்த பாகற்க்காய் ஐஸ்கிரீம், சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்ல, சத்தான ஐஸ்கிரீம் விரும்பும் அனைவருக்கும் சிறந்த தேர்வாக அமையும். சும்மா ஒருமுறை செய்து பாருங்கள், சுவை மறக்க முடியாதது!

 

இதையும் படிங்க: பாம்பு வீட்டிற்குள் வருவது போல் கனவு வருகிறதா? எப்படி பாம்பு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கான விளக்கம் இதோ....

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#பாகற்க்காய் ice cream #diabetic friendly dessert #bitter gourd recipe #பாவக்காய் நன்மைகள் #healthy ice cream recipe
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story