×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குதிங்கால் வெடிப்பு, வியர்வை நாற்றத்தை சரிசெய்ய ரூ.10 செலவு செய்தால் போதும்.. அசத்தல் தீர்வு.. சூப்பர் டிப்ஸ்.!

Alum Benefits: ஊர் கடைகளில் குறைந்த விலைக்கு கிடைக்கும் படிகாரம் முக்கிய பிரச்சனைக்கு தீர்வு தரும்.

Advertisement

படிகாரம் கொண்டு நாம் உடலின் ஒருசில பிரச்சனை மற்றும் அசௌகரியத்தை சரி செய்யலாம்.

ஆண்டி-பாக்டீரியல் தன்மை:

ஊர்களில் இருக்கும் மளிகைக்கடையில் தொடங்கி, நாட்டுமருந்து கடை வரை கிடைக்கும் பொருள் படிகாரம். இதனை ஆங்கிலத்தில் ALUM என்று கூறுவார்கள். ரூ.10 க்கு விற்பனை செய்யப்படும் படிகாரம் வேதியியல் துறையில் பொட்டாஸியம் அலுமினியம் சல்பேட் என அழைக்கப்படுகிறது. இதில் ஏராளமான ஆண்டி-பாக்டீரியல் தன்மை உள்ளது. வீக்கம் குறைக்கும் பண்பும், கிருமி நாசினியாக செயல்படும் குணமும் உள்ளது.  

இதையும் படிங்க: கலப்பட வெல்லத்தை கண்டுபிடிப்பது எப்படி?.. வீட்டிலேயே எளிய முறையில் கண்டறிய டிப்ஸ்.!

வாசனை திரவியம்:

வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த படிகாரத்தை பொடியாக்கி தண்ணீரில் கலந்து வாயை கொப்பளிக்கலாம். இதனால் வாயில் இருக்கும் தீங்கான பாக்டீரியா அழியும். நாள் முழுவதும் புத்துணர்ச்சி கிடைக்கும். நாம் தினமும் வாசனை திரவியம் பயன்படுத்தும் முன், படிகாரத்தை அங்கு தேய்த்துவிட்டு பின் அதனை பயன்படுத்தலாம். இதனால் வாசனை திரவியம் நறுமணம் நீண்ட நேரம் நீடிக்கும். வியர்வை வாசமும் கட்டப்படும். 

பாத வெடிப்பு சரியாக:

சரும பாதிப்புகளை குறைக்க குளித்ததும் அக்குள் பகுதியில் படிகார கற்களை கொண்டு தேய்க்க வேண்டும். இது வியர்வை துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாவை தடுக்கும். பாதங்களில் இருக்கும் வெடிப்புகளை சரி செய்யும். படிகார பொடியை சுத்தமான தேங்காய் எண்ணெயுடன் கலந்து பேஸ்ட் போல செய்து இரவில் பாதத்தில் தடவி படுக்கலாம். குளிக்கும் வாளியில் சிறிதளவு படிகார பொடி சேர்த்து குளிக்க, சருமத்தின் அழுக்குகள் நீங்கும். சந்தேகம் இருப்பின் தோல் நிபுணரை நாடுவது நல்லது.

இதையும் படிங்க: வீட்டில் இருந்தபடியே வலியில்லாமல் 'மருக்கள்' உதிர வைக்க இந்த ஒரு பொருள் போதும்! ட்ரை பண்ணி பாருங்க!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#health tips #Alum Nanmaigal #படிகாரம் நன்மைகள்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story