"ஓடும் காரில் இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்... " 2 வாலிபர்கள் வெறி செயல்.!!
ஓடும் காரில் இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்... 2 வாலிபர்கள் வெறி செயல்.!!
உத்திரபிரதேச மாநிலத்தில் இளம் பெண் ஒருவரை ஓடும் காரில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உத்திரபிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில் 18 வயது இளம் பெண் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்துவிட்டு சாலையின் வழியாக நடந்து வந்துள்ளார். அப்போது அந்தப் பகுதியின் வழியாக காரில் வந்த 22 வயதான நிதின் தாக்கூர் என்பவர் இளம்பெண்ணுக்கு லிப்ட் கொடுத்துள்ளார். தெரிந்த நபர் என நம்பி காரில் ஏறிய இளம் பெண்ணை உரிய இடத்தில் இறக்கி விடாமல் அணைக்கட்டு அமைந்த பகுதியின் மறைவான இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
இந்நிலையில் காரில் அழைத்துச் சென்ற நித்தினுடன் இன்னொரு நபரும் பயணித்துள்ளார். இருவரும் சேர்ந்து இளம்பெண்ணை ஓடும் காரிலேயே கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்தக் கொடுமையில் கதி கலங்கி போன பெண்ணின் புகாரின் பேரில் அந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் அதிர்ச்சி... பொதுவெளியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.!! 29 வயது இளைஞர் கைது.!!
இந்த நிதின் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 3 மாதங்களாக அறிமுகமான நபராவார். இவர் மீதும் அடையாளம் தெரியாத மற்றொரு நபர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கான தண்டனை உரிய நேரத்தில் வழங்கப்படும் என போலீஸ் சூப்பிரண்ட் காலுசிங் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "தொடர் பாலியல் தொந்தரவால் உயிரை மாய்த்த 21 வயது மாணவி... " அதிர்ச்சி பின்னணி.!! குற்றவாளிக்கு வலை வீச்சு.!!