சென்னையில் அதிர்ச்சி... பொதுவெளியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.!! 29 வயது இளைஞர் கைது.!!
சென்னையில் அதிர்ச்சி... பொதுவெளியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.!! 29 வயது இளைஞர் கைது.!!
சென்னையிலுள்ள எம்.ஜி.ஆர் நகரில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை செய்த இளைஞர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
40 வயதான பெண்னொருவர் நெசபாக்கம் ராமன் தெருவின் வழியாக நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இச்செயலை கண்டிக்கும் விதமாக அந்த பெண் போலீசிடம் புகாரளித்துள்ளார்.
இதனையடுத்து எம்.ஜி.ஆர் நகரிலுள்ள போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன்படி கோடம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ்வரன் (வயது 29) என்பவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட வாலிபரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நீதி வழங்கப்படும் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் பயங்கரம்... நடுரோட்டில் மாணவிக்கு பாலியல் தொல்லை.!! போலீஸிடம் சிக்கிய குற்றவாளி.!!
இதையும் படிங்க: "பொது இடங்களிலும் பாதுகாப்பில்லையா..." இரயில் நிலையத்தில் பாலியல் சேட்டை.!! 30 வயது நபர் கைது.!!