இப்படி கூட நடக்குமா! நம்பவே முடியல... 20 ஆண்டுகளாக காது கேட்காமல் இருந்த பெண்! பல் சிகிச்சைக்கு பிறகு நடந்த அதிசயம்! வியக்க வைக்கும் சம்பவம்...
இப்படி கூட நடக்குமா! நம்பவே முடியல... 20 ஆண்டுகளாக காது கேட்காமல் இருந்த பெண்! பல் சிகிச்சைக்கு பிறகு நடந்த அதிசயம்! வியக்க வைக்கும் சம்பவம்...
குஜராத் மாநிலத்தின் சூரத் மாவட்டத்தில் உள்ள கோஸம்பா பகுதியில் வசிக்கும் 63 வயதான ஜைபுன்னிசா என்ற பெண் கடந்த 20 ஆண்டுகளாக காது கேட்க முடியாமல் வாழ்ந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக எந்தவொரு திருமண விழா, சமூக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க முடியாமல் தனிமையில் வாழ்ந்து வந்தார்.
அதிக விலையுடைய hearing aid சாதனங்களும் அவருக்கு பயனளிக்கவில்லை. இதனால், பக்கத்து வீட்டு மக்கள் “ மகன்கள் வெளிநாட்டில் இருப்பதால் இவர் அகந்தையுடன் இருப்பதாக” என எண்ணினர். ஆனால் உண்மையில், அவர் முழுமையாக காது கேட்க முடியாத நிலையை எதிர்கொண்டு வந்தார்.
இந்நிலையில், இந்த ஆண்டு ஜூலை மாதம் Cochlear Implant சிகிச்சை திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே ஒரு அற்புதம் நிகழ்ந்தது. வீட்டில் இருக்கும்போது திடீரென சத்தங்கள் கேட்கத் தொடங்கியதாக ஜைபுன்னிசா கூறியுள்ளார். கணவரிடம் கூறிய பிறகு பக்கத்து வீட்டார் பேசுவதை வைத்து அவர் மீண்டும் காது கேட்கத் தொடங்கினார் என்பதை உறுதி செய்துள்ளனர்.
இந்த மாற்றம், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பல் சிகிச்சைகள், பல் பொருத்துதல், மற்றும் நரம்பு சீரமைப்புகள் ஆகியவற்றுக்குப் பிறகு ஏற்பட்டது. பல் நிபுணர் டாக்டர் ரிஷி பட்ட் கூறுகையில், “பல் சிகிச்சையின் போது நரம்புகள் மீது இருந்த அழுத்தம் நீங்கியதால் தான் காது கேட்கும் திறன் திரும்பியிருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ENT நிபுணர்கள் திட்டமிட்டிருந்த Cochlear சிகிச்சை ரத்து செய்யப்பட்டது. தற்போது ஜைபுன்னிசா தொலைபேசியில் சுதந்திரமாக பேச முடியும் நிலையில் இருக்கிறார். சமூக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கத் தயாராக உள்ளார்.
அவரது கணவர் டாக்டர் அபாஸ், “முதலில் நம்பவே முடியவில்லை. ஆனால் இறைவனுக்கே நன்றி” என்று பெருமிதத்துடன் கூறுகிறார். இந்த சம்பவம், ஒரு பல் சிகிச்சை எவ்வாறு மற்ற உடல் உறுப்புகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்த்தும் முக்கிய எடுத்துக்காட்டாகும்.