மொபைல் போனில் முழு கவனமும் இருந்ததால் ரயிலை தவறவிட்ட முதியவர்! பதட்டத்தில் செய்த அதிர்ச்சி செயல்! கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபரீதம்! வைரலாகும் வீடியோ..
மொபைல் போனில் முழு கவனமும் இருந்ததால் ரயிலை தவறவிட்ட முதியவர்! பதட்டத்தில் செய்த பயங்கர செயல்! கண்ணிமைக்கும் நொடியில் நடந்த அதிர்ச்சி! வைரலாகும் வீடியோ..
மத்திய பிரதேசம் பெதூல் ரயில் நிலையத்தில் போபால்-நாக்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் நின்றிருந்தது. இந்த ரயிலில் பயணித்த ராகேஷ் குமார் ஜெயின் என்ற மூதுவரான பயணி, ரயில் நின்றபோது இறங்கி இருந்தார். அருகிலுள்ள இருக்கையில் அமர்ந்தபடி மொபைல் போனை பார்த்து கொண்டிருந்த அவர், ரயில் புறப்பட்டதை கவனிக்கவில்லை.
திடீரென ரயில் நகரும் போது அவர் அதனைப் பார்த்து ஓடி சென்று ஏற முயற்சித்தார். ஆனால் தவறி கீழே விழுந்தார். அவரது உடல் சக்கரங்களுக்கு மிக அருகில் சென்ற வேளையில், அருகில் இருந்த RPF பாதுகாப்பு வீரர் சத்யபிரகாஷ் ராஜூர்கர் நேரத்தில் செயல்பட்டு அவரை இழுத்து உயிர் காப்பாற்றினார்.
இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாக பரவி வருகின்றது. நெட்டிசன்கள் RPF வீரரின் செயலுக்குப் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வகுப்பறையில் டீச்சர் செய்யுற வேலையா இதெல்லாம்! தலைக்கு எண்ணெய் தடவி, இசை கேட்க என்னென்ன பாருங்க! அது மட்டுமா! வைரலாகும் வீடியோ...
RPF துறை, இந்த வீடியோவைப் பகிர்ந்துகொண்டு, "வேகமான செயல் மற்றும் விழிப்புணர்வு உயிரைக் காக்கிறது. ரயில்வே நிலையங்களில் மொபைலில் மூழ்க வேண்டாம்" என எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
தற்போது ராகேஷ் குமார் மருத்துவமனையில் நலமுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த திகிலூட்டும் சம்பவம், ரயில் நிலையத்தில் சற்று நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.