×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வகுப்பறையில் டீச்சர் செய்யுற வேலையா இதெல்லாம்! தலைக்கு எண்ணெய் தடவி, இசை கேட்க என்னென்ன பாருங்க! அது மட்டுமா! வைரலாகும் வீடியோ...

வகுப்பறையில் டீச்சர் செய்யுற வேலையா இதெல்லாம்! தலைக்கு எண்ணெய் தடவி, இசை கேட்க என்னென்ன பாருங்க! அது மட்டுமா! வைரலாகும் வீடியோ...

Advertisement

உத்திரபிரதேசம் மாநிலத்தின் புலந்த்ஷேர் மாவட்டம் முந்தக்கேடா ஆரம்பப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை சங்கீதா மிஸ்ரா தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வகுப்பறையில் மாணவர்கள் இருக்கும்போது ஆசிரியை தனது தலைமுடிக்கு எண்ணெய் தடவுவதும், கைபேசியில் கிளாசிக்கல் இசை ஒலிக்க வைப்பதுமாக காணப்படுகிறார்.

இந்த சம்பவம் கல்வித்துறையை விமர்சனத்துக்குள்ளாக்கி, பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், மாணவர்களின் பெற்றோர்களிடம் தவறாக நடந்துகொண்டதோடு, கம்பியால் அடித்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், மாவட்ட அடிப்படை கல்வி அதிகாரி டாக்டர் லஷ்மிகாந்த் பாண்டே, சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகியதும் தனிப்பட்ட விசாரணை அலுவலரை நியமித்துள்ளார். அதற்குமுன் சங்கீதா மிஸ்ராவை பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Video : ஒரே நிமிடத்தில் 122 தேங்காய்கள் உடைத்து கின்னஸ் புத்தகத்தில் புதிய உலக சாதனை! 14 வருட சாதனையை முறியடித்து வாலிபர்! வியக்க வைக்கும் காட்சி..

மேலும், ஜூலை 16ஆம் தேதி பள்ளிக்கு வராத போது, வருகை பதிவேட்டில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எழுதிய குறிப்பை ஆசிரியை அழித்ததாகவும், தற்போது அவள் புலந்த்ஷேர் மாவட்டம் குர்ஜா வட்டத்தில் உள்ள ஜமால்புர் ஆரம்பப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வகை செயல்கள், பள்ளி மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ரயில் நிலையத்தில் CPRF வீரரை காலால் மிதித்து! கூட்டமாக சேர்ந்து கொடூரமாக தாக்கிய யாத்ரீகர்கள்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#புலந்த்ஷேர் video #ஆசிரியை viral #பள்ளி விவகாரம் #Bulandshahr teacher issue #UP school news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story