கணவருடன் மற்றொரு பெண்.. ஆத்திரத்தில் மனைவி செய்த காரியம்!
கணவருடன் மற்றொரு பெண்.. ஆத்திரத்தில் மனைவி செய்த காரியம்!
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் மௌரானிபூர் பேருந்து நிலையத்தில் கணவரை மற்றொரு பெண்ணுடன் பார்த்ததாகக் கூறி மனைவி ஆத்திரத்தில் அந்த பெண்ணை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மௌரானிபூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பேருந்து நிலையத்திற்கு ஒரு இளம்பெண்ணுடன் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த அவரது மனைவி, கணவரை அந்த பெண்ணுடன் பார்த்ததாகவும், அவர்களிடம் சென்று விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. அந்த இளம்பெண் தனது கணவரின் காதலி என மனைவி சந்தேகித்துள்ளார்.
இதையடுத்து இரு பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மனைவி, அந்த இளம்பெண்ணை பிடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. கணவரும் மனைவியிடம் இருந்து தப்பிக்க முயன்ற நிலையில், ஒரு கட்டத்தில் அங்கிருந்து ஓடிச் சென்றுள்ளார். இதனால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டதுடன், சம்பவத்தை வேடிக்கை பார்க்க பொதுமக்கள் திரண்டனர்.
இதையும் படிங்க: கன்ஃபார்ம் டிக்கெட் என ஆசை வார்த்தை.. ரயில் நிலையத்திலேயே இளம்பெண்ணுக்கு கொடூரம்!
இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து, அதனை, சமூக வலைதளங்களில் வெளியிட இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனையடுத்து இதனை வழக்கமாக பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மௌரானிபூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் கணவன், மனைவி மற்றும் மற்றொரு பெண் இடையிலான தகராறு காரணமாக ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கணவர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.