கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்.. ஸ்கெட்ச் போட்ட மனைவி.. ஓடும் ரயிலில் திடுக்.!
Extramarital Affair Ends in Murder: கணவனை மனைவி கூலிப்படை ஏவி கொலை செய்தார்.
ஓடும் ரயிலில் மனைவியால் கணவனுக்கு நேர்ந்த பயங்கரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுட்டுக்கொலை:
Love Affair Turns Deadly: பீகார் மாநிலத்தில் உள்ள மான்சி ரயில் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த ஜூன் 11ம் தேதி விரைவு இரயிலில் பயணம் செய்த மின்சாரத்துறை ஊழியர் தேவ்குமார் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: காதலியை பார்த்துவிட்டு வரும்வழியில் இளைஞருக்கு நடத்த கோர மரணம்.. சென்னையில் ஷாக்.!
விசாரணை:
இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தொழில்நுட்பம், அறிவியல் என பல துறைகளின் வாயிலாக விசாரணை முன்னெடுக்கப்பட்டது. அப்போது, தேவ்குமாரின் மனைவியான சுமிதா குமாரி மீது சந்தேகம் எழுந்தது. இவர் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
கள்ளக்காதல்:
அதாவது, கள்ளக்காதல் வயப்பட்ட சுமிதா குமாரி, தனது கள்ளக்காதலன் அஜித் குமார் மற்றும் கூலிப்படை கூட்டாளிகள் ராஜு ஆகியோரின் உதவியுடன் தேவ் குமாரை கொலை செய்தது அம்பலமானது. கள்ளக்காதல் உறவுக்கு இடையூறாக இருந்ததால் இந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: கள்ளக்காதலுக்காக 26 வயது இளம் கணவன் பலி.. அழுகிய சடலமாக மீட்கப்பட்ட அவலம்.. அதிர்ச்சி சம்பவம்.!