கள்ளக்காதலுக்காக 26 வயது இளம் கணவன் பலி.. அழுகிய சடலமாக மீட்கப்பட்ட அவலம்.. அதிர்ச்சி சம்பவம்.!
பெண் தனது கணவரை கொலை செய்து புதைத்தார்.
26 வயது கணவரை கள்ளக்காதலுக்காக இளம்பெண் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மாயம்:
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாதனா மாவட்டத்தில் வசித்து வந்தவர் விபின் குமார் யாதவ் (வயது 26). இவர் கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி மாமியார் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றவர், 4 நாட்கள் கடந்து மார்ச் 27 முதல் மாயமானார். இதுதொடர்பாக விபினின் தந்தை காவல் நிலாயத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த 9 வயது மகள் கழுத்து நெரித்துக்கொலை.. தாயின் படுபாதக செயல்.!
மனைவி சிக்கினார்:
இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், பல மாதங்களாக முன்னேற்றம் கிடைக்கவில்லை. இறுதியாக விபின் குமாரின் மனைவியின் செல்போன் விபரங்களை ஆய்வு செய்தபோது, அவர் - சுனில் குஷுவாகா என்ற நபருடன் நீண்ட நேரம் பேசி வந்தது தெரியவந்தது.
கள்ளக்காதல்:
இதனையடுத்து, விபின் குமாரின் மனைவி, சுனில் குஷுவாகா ஆகியோரை கைது செய்து விசாரித்தபோது அதிர்ச்சி தகவல் அம்பலமானது. அதாவது, மார்ச் 27ம் தேதி விபின் குமாரை கள்ளக்காதல் ஜோடி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளது. பின் உடலை கிணற்றிலும் வீசியுள்ளது.
கைது:
உடல் கிணற்றில் எப்படியானாலும் மிதந்துவிடும் என்ற பயத்தில், உடலை கிணற்றில் இருந்து எடுத்து வடிகால் அருகில் புதைத்ததும் அம்பலமானது. இவர்களின் வாக்குமூலத்துக்குப்பின் விபினின் அழுகிய சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: ஒவ்வொரு நாளும் இப்படியா? வாழ்நாளை நரகமாக்கிய கணவனை எமலோகத்துக்கு அனுப்பிய மனைவி..!