×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அய்யோ... கடவுளே! மனைவியின் வாட்ஸ்அப் மெசேஜைப் பார்த்து அலறி அடித்து ஓடிய கணவன்! இறுதியில் காத்திருந்த டுவிஸ்ட்..!!!

தெலங்கானாவில் மனைவி மற்றும் அவரது காதலர் மீது கணவரைக் கொல்ல சதி செய்ததாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. சமூக வலைதள உரையாடல் ஆதாரமாக போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர்.

Advertisement

தெலங்கானாவின் மகாபூபாபாத் மாவட்டத்தில், மனைவி மற்றும் அவரது காதலர் மீது கணவரைக் கொல்ல சதி செய்ததாக எழுந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதள உரையாடல்களின் ஸ்கிரீன்ஷாட்களை ஆதாரமாகக் கொண்டு பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், தற்போது போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட விரிசல்

மகாபூபாபாத் மாவட்டம் தோர்ணக்கல் மண்டலம் சிலுகோடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வர ராவுக்கும், சூர்யாபேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பவானிக்கும் 2016-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தகவலின்படி, பவானிக்கு சைதுல் என்ற கூரியர் ஊழியருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஒட்டிப் பிறந்த சகோதரிகள்... 10-ஆம் வகுப்பு முதல் B.Com வரை சாதனை.! எஸ்பிஐ தேர்வில் அரசு வைத்த அதிர்ச்சியால் கதறும் சகோதரிகள்...!!!

கடந்த மாதம் 27-ஆம் தேதி இந்த விவகாரம் ராஜேஸ்வர ராவுக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து, இரு குடும்பத்தினரும் முன்னிலையில் பஞ்சாயத்து நடத்தப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின் தனது சகோதரரை அழைத்து வர வெளியே சென்ற ராஜேஸ்வர ராவை, சைதுல் பின்தொடர்ந்து தாக்க முயன்றதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் உரையாடலில் அதிர்ச்சி தகவல்

வீட்டுக்குத் திரும்பிய ராஜேஸ்வர ராவ், மனைவியின் வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளைப் பார்த்தபோது அதிர்ச்சியடைந்ததாக கூறியுள்ளார். அதில், தனது கணவரைக் கொல்லுமாறு சைதுலுக்கு பவானி செய்தி அனுப்பியிருந்ததாகவும், இல்லையெனில் தானே உயிரை மாய்த்துக்கொள்வேன் என்று குறிப்பிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புகாருக்கு பின் போலீசார் நடவடிக்கை

அந்த உரையாடல்களின் ஸ்கிரீன்ஷாட்களை சேகரித்த ராஜேஸ்வர ராவ் முதலில் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், ஆரம்பத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. பின்னர் மீண்டும் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து, அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து உரிய விசாரணை நடத்தப்படும் என சம்பந்தப்பட்ட ஊரக காவல் ஆய்வாளர் (CI) உறுதியளித்துள்ளார்.

 

இதையும் படிங்க: மனைவி, குழந்தைகள் என 6 பேரை கொன்ற சைக்கோ.. போக்ஸோ புகார் கொடுத்த சிறுமி பலாத்காரம் செய்து கொலை.. ஷாக் பின்னணி.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Telangana #கள்ளத்தொடர்பு #WhatsApp chat #போலீஸ் விசாரணை #Crime news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story