மனைவி, குழந்தைகள் என 6 பேரை கொன்ற சைக்கோ.. போக்ஸோ புகார் கொடுத்த சிறுமி பலாத்காரம் செய்து கொலை.. ஷாக் பின்னணி.!
Six Killed After POCSO Accused Released on Bail: சைக்கோ கணவன் மனைவி, குழந்தைகள் உட்பட 6 பேரை கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
போக்ஸோ வழக்கில் சிறைக்கு அனுப்பிய சிறுமி உட்பட 6 பேரை கொடூரமாக கொலை செய்த சைக்கோ கைது செய்யப்பட்டுள்ளான். இவ்வழக்கில் சிறுமியை கொடூரன் பலாத்காரம் செய்து கொலை செய்த பதறவைக்கும் தகவலும் அம்பலமாகியுள்ளது.
போக்ஸோவில் கைது:
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரங்காரெட்டி மாவட்டம், ஷாபாத், டைவாளைகுடா பகுதியில் 17 வயதுடைய சிறுமி வசித்து வைக்கிறார். இவருக்கு அப்பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 35) என்பவர், கடந்த மே மாதத்தில் பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில் ராஜ்குமார் போக்ஸோவில் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. தவெக நிர்வாகி கைது.. சென்னையில் ஷாக்.!
சரமாரியாக வெட்டிக்கொலை:
இதனிடையே, சிறையில் அடைக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த ராஜ்குமார் சிறுமி உட்பட அவரின் குடும்பத்தினரை கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். ஜாமினில் சில நாட்களுக்கு முன்பு வெளியே வந்தவர், சிறுமியின் வீட்டுக்குச் சென்று இருக்கிறார். அதிகாலை நேரத்தில் உறங்கிக்கொண்டு இருந்த சிறுமியின் பாட்டி ருக்கம்மா (வயது 65), சிறுமியின் தாய் சித்தியாலட்சுமி (வயது 45) ஆகியோரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார்.
பலாத்காரம் & கொலை:
பின் சிறுமியை தூக்கிச் சென்றவர் விவசாய நிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, அவரையும் கொலை செய்தார். ஆத்திரம் அடங்காத ராஜ்குமார் வீட்டுக்குச் சென்று மனைவி பார்வதி (வயது 30), குழந்தைகள் பர்ஷித் (வயது 3), தைவிஷித் (வயது 2) ஆகியோரையும் கொலை செய்தார். பின் பெற்றோரின் வீட்டுக்குச் சென்று தகவலை தெரிவித்துள்ளார்.
காவல்துறை விசாரணை:
இதனைக்கேட்டு அதிர்ந்துபோன ராஜ்குமாரின் பெற்றோர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நேரில் வந்த அதிகாரிகள் கொலை செய்யப்பட்டவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவான குற்றவாளியை தேடி வருகின்றனர். சிறுமியிடம் அத்துமீற முயன்று போக்ஸோ வழக்கில் கைதானவர், ஜாமினில் வந்ததும் இவ்வாறான கொடூரத்தை அரங்கேற்றி, சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 2 ஆண்டுகளில் கசந்த காதல்.. வருத்தத்தில் பிரிந்த மனைவி குத்திக்கொலை.. ஏரிக்கரையில் அரங்கேறிய கொடூரம்.!