2 ஆண்டுகளில் கசந்த காதல்.. வருத்தத்தில் பிரிந்த மனைவி குத்திக்கொலை.. ஏரிக்கரையில் அரங்கேறிய கொடூரம்.!
வேலை நேர்காணலுக்கு வந்த மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலனே வேண்டும் என கரம்பிடித்த பெண்ணை கணவரே கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
காதல் திருமணம்:
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் புறநகர் மாவட்டம், ஆவலஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் கணேஷ். சிக்கபள்ளாபூர் மாவட்டம், சிந்தாமணி தாலுகாவில் வசித்து வருபவர் யோகினி (வயது 21). இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து, பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப்பின் மாலூர் பகுதியில் வாடகை வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்துள்ளனர்.
இதையும் படிங்க: கோவையில் பயங்கரம்.. இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியின் சடலத்துடன் செல்பி எடுத்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவர்.!
டார்ச்சர்:
இதனிடையே, தம்பதிகளுக்குள் நிலவிய கருத்து வேறுபாடு காரணமாக, காதல் மனைவியை கணேஷ் துன்புறுத்தி வந்துள்ளார். ஒருகட்டத்தில் கணவரின் செயலால் விரக்தியடைந்த பெண்மணி தாயின் வீட்டுக்குச் சென்றுள்ளார். பின் மனைவியை தொடர்புகொண்ட கணவர், அவரை சமாதானம் செய்ய முயற்சித்தார். ஆனால், பலனில்லை.
ஏரியில் வாக்குவாதம்:
இந்நிலையில், தனிப்பட்ட வருமானம் வேண்டி யோகினி வேலை தேடி இருக்கிறார். வேலைக்காக கோலார் மாவட்டம் மாலூர், நாராசபுரா தொழிற்பேட்டையில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் நேர்காணலுக்கு வந்துள்ளார். இந்த தகவலை அறிந்த கணேஷ் மனைவியை நேரில் சென்று சந்தித்த நிலையில், சமரசம் பேசி ஏரிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மீண்டும் அவர்களுக்குள் வாக்குவாதம் உண்டாகி இருக்கிறது.
பரிதாப பலி:
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த கணேஷ், தான் மறைத்து எடுத்து வந்த கத்தியை கொண்டு யோகினியை சரமாரியாக குத்தி இருக்கிறார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பெண்மணி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின் இதுகுறித்து மாமியார் கல்பனாவுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவே, அவர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதன்பேரில் நேரில் சென்ற காவல்துறையினர் யோகினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மனைவியை கொலை செய்து அங்கேயே இருந்த கணேஷும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: காதல் திருமணம் கசந்ததால் கள்ளக்காதல்.. வீடெல்லாம் ரத்த வெள்ளம்.. அரங்கேறிய பயங்கரம்.!