×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அவுங்களும் மனுஷங்க தானே..! எவ்வளவு கஷ்டம்... 12 மணி நேரம் வேலை..! கால் வீங்கியும் கொஞ்சம் கூட அசையல... பெண் வெளியிட்ட கோரிக்கை வீடியோ !!!

12 மணி நேரம் தொடர்ந்து நின்றபடி வேலை செய்யும் பாதுகாவலரின் கால்கள் வீங்கியதைக் காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Advertisement

12 மணி நேரம் தொடர்ந்து நின்றபடி வேலை செய்யும் பாதுகாவலர் ஒருவரின் நிலையை வெளிப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வேலை நேரத்தில் சிறிது நேரம் கூட உட்கார முடியாத அவரது நிலையைப் பார்த்து பலரும் வேதனை தெரிவித்துள்ளனர். பாதுகாப்புப் பணியில் இருப்பவர்களுக்கு அடிப்படை இருக்கை வசதிகூட வழங்கப்படுவதில்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

12 மணி நேரமும் நின்றபடியே வேலை

வைரலாகி வரும் வீடியோவில், பெண் ஒருவர் பாதுகாவலரிடம் அவரது வேலை நேரம் குறித்து கேட்கிறார். அதற்கு அவர் 12 மணி நேரம் வேலை செய்வதாகப் பதிலளிக்கிறார். தொடர்ந்து, அந்த நேரம் முழுவதும் நின்றபடியே பணியாற்றுகிறீர்களா என்று அந்தப் பெண் கேட்க, ஆம் என அவர் கூறுகிறார்.

இதையும் படிங்க: அம்மாவா இது..? என்ன நடந்தது என்பதை பார்க்காமல் சண்டைக்கு போன தாய்... அடுத்து நடந்த அதிர்ச்சி! ஷாக் வீடியோ...!!!

இதையடுத்து அவரது கால்களைப் பார்த்த அந்தப் பெண் அதிர்ச்சியடைந்தார். நீண்ட நேரம் தொடர்ந்து நின்றதால் பாதுகாவலரின் கால்கள் வீங்கியிருந்தன. வேலை நேரத்தில் உட்காருவதற்கு நாற்காலி கிடைத்தால் நன்றாக இருக்குமே என அவர் கேட்கிறார். அதற்கு, இடைவேளையில் சிறிது நேரம் உட்கார வாய்ப்பு கிடைத்தால்கூட கால் வலி மற்றும் வீக்கத்தில் இருந்து ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என அந்தப் பாதுகாவலர் தெரிவிக்கிறார்.

இருக்கை வசதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை

இந்த வீடியோவைப் பார்த்த பலரும் பாதுகாப்புப் பணியாளர்களின் வேலைச் சூழல் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். அலுவலகங்கள், வணிக வளாகங்கள், கடைகள் உள்ளிட்ட இடங்களில் நீண்ட நேரம் நின்றபடி பணியாற்றும் ஊழியர்களுக்கு ஓய்வெடுக்கவும் உட்காரவும் உரிய வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

பணியாளர்களின் உடல்நலத்தையும் அடிப்படைத் தேவைகளையும் நிறுவனங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், நீண்ட நேரம் நிற்க வேண்டிய பணிகளில் இருப்பவர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்துவது தொடர்பாக உரிய விதிமுறைகள் தேவை என்றும் சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: நல்லது செஞ்ச பொண்ணுக்கு இப்படி ஒரு பேரா..? தேம்பி தேம்பி அழுது வீடியோ வெளியிட்ட இந்திய பெண்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#செக்யூரிட்டி ஊழியர் #வைரல் வீடியோ #12 மணி நேர வேலை #security guard #தொழிலாளர் உரிமைகள்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story