பைக் டேங்கில் உட்கார்ந்து மாமாக்குட்டியுடன் லாங் டிரைவ்.. எல்லை மீறிய காதல் ஜோடியின் வீடியோ வைரல்.!!
பைக் டேங்கில் உட்கார்ந்து மாமாக்குட்டியுடன் லாங் டிரைவ்.. எல்லை மீறிய காதல் ஜோடியின் வீடியோ வைரல்.!!

காதலியை பைக் டேங்கில் உட்கார வைத்து உயிருக்கு ஆபத்தான முறையில் காதல் ஜோடி பயணித்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
இன்றளவில் காதல் ஜோடிகள் சாலை என்றும் பாராது பொது இடங்களில் எல்லை மீறுவது தொடர்கதையாகி வருகிறது. இது தொடர்பான பல காட்சிகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனத்தையும் குவித்து வருகிறது. ஒரு சில சமயங்களில் காவல்துறையினர் கைது நடவடிக்கையும் மேற்கொள்கின்றனர்.
உயிருக்கு ஆபத்தான பயணம் :
இதனிடையே ஆந்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காதல் ஜோடி ஒன்று விஜயவாடா நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் பைக்கில் செல்லும் போது ஆபத்தான வகையில் பயணம் செய்தது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஒரேநேரத்தில் 2 மனைவியுடன் குடித்தனம்.. அப்பா, தாத்தாவை இன்ஸ்பிரேஷனாக்கி பெருமிதம்.!!
டேங்கில் உட்கார்ந்து பயணம் :
ஆந்திர மாநிலத்தில் எடுக்கப்பட்டதாக தெரியவரும் இந்த வீடியோவில் காதலியை, காதலன் இருசக்கர வாகனத்தில் டேங்கில் அமர வைத்து ஆபத்தான முறையில் அழைத்துச் செல்கிறார்.
நெட்டிசன்கள் கோரிக்கை :
இந்த வீடியோ வைரலாகி வருவதை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி காதல் ஜோடிக்கு உரிய பாடம் புகட்ட வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: Video: உறங்கி கொண்டிருந்த சிறுவனுக்கு கருநாக வடிவில் வந்த எமன்.. வாயில் நுரை தள்ளி பரிதாப சாவு.!!