Video: உறங்கி கொண்டிருந்த சிறுவனுக்கு கருநாக வடிவில் வந்த எமன்.. வாயில் நுரை தள்ளி பரிதாப சாவு.!!
Video: உறங்கி கொண்டிருந்த சிறுவனுக்கு கருநாக வடிவில் வந்த எமன்.. வாயில் நுரை தள்ளி பரிதாப சாவு.!!
சிறுவன் உறங்கிக்கொண்டிருந்தபோது கருநாக பாம்பு தீண்டியதில் விஷம் பரவி பரிதாபமாக உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாக்பத் மாவட்டம், லம்ப் கிராமத்தில் வசித்து வருபவர் மனோஜ் (வயது 17). சிறுவன் அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார்.
பலமுறை கடித்த பாம்பு :
இதனிடையே நேற்று இரவு தனக்கு கொடுக்கப்பட்ட அறையில் மனோஜ் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சிறுவன் தங்கியிருந்த அறைக்குள் வந்த கருநாக பாம்பு ஒன்று அவரை பலமுறை கடித்து இருக்கிறது.
இதையும் படிங்க: அடக்கடவுளே.. 9 வயது சிறுமி தலையில் பலாப்பழம் விழுந்து உயிரிழப்பு.. இப்படியும் மரணம்..!!
சிறுவன் பரிதாப பலி:
இதனால் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மனோஜ், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அதிக விஷத்தால் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் சிறுவன் மனோஜை பாம்பு தீண்டிய சிசிடிவி காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுகுறித்த வீடியோவானது காண்போரை பதறவைத்துள்ளது.
பாம்பு தீண்டியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் :
இதையும் படிங்க: பெட் கட்டி மொடாக்குடி; குழந்தை பிறந்த 8 நாட்களில் எமலோகத்திற்கு டிக்கெட்.!!