×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பெட் கட்டி மொடாக்குடி; குழந்தை பிறந்த 8 நாட்களில் எமலோகத்திற்கு டிக்கெட்.!!

பெட் கட்டி மொடாக்குடி; குழந்தை பிறந்த 8 நாட்களில் எமலோகத்திற்கு டிக்கெட்.!!

Advertisement

தண்ணீர் கலக்காமல் மது குடிப்பதாக 5 பாட்டில்களை முடித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டத்தில் வசித்து வந்தவர் கார்த்திக் (வயது 21). இவருக்கு திருமணமாகி ஒரு வருடம் முடிந்த நிலையில், 8 நாட்களுக்கு முன்னதாக பெண் குழந்தையும் பிறந்துள்ளது. 

பந்தயம்

இந்நிலையில் தண்ணீர் கலக்காமல் ஐந்து பாட்டில் மதுபானத்தை குடிப்பதாக பந்தயம் கட்டியவர், முடியாத நிலையிலும் ரூ.10,000 கிடைக்கும் என எண்ணி முழுவதுமாக குடித்துள்ளார். இதனால் கடுமையான உடல்நல பாதிப்பிற்குள்ளான இளைஞர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: பெங்களூரில் பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம்? வெளியான அதிர்ச்சி தகவல்.!

உயிரிழப்பு

இருப்பினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து கார்த்திக்கின் நண்பர்களான வெங்கட ரெட்டி, சுப்பிரமணி உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டனர்.

பெண் குழந்தை பிறந்து 8 நாட்களேயான நிலையில், ரூ.10,000 பணத்திற்காக தந்தை மது குடிப்பதாக பந்தயம் கட்டி குடும்பத்தை தவிக்க விட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: என்.சி.எல் நிலக்கரி நிறுவனத்தில் அசத்தல் வேலைவாய்ப்பு.! இன்றே விண்ணப்பியுங்கள்..!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#death #drinking alcohol #karnataka men death #5 liquor drink #கர்நாடகா
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story