மானக்கெட்ட பொழப்பு! காசுக்காக சொந்த மனைவி, மகளையே விற்கும் கொடூரம்! தலைமுறையாக தொடரும் பழக்கம்... காலையிலேயே நெடுஞ்சாலையில் நடக்கும் அதிர்ச்சி சம்பவம்..! வாடியா கிராமத்தின் பகீர் பின்னணி...!!!
குஜராத் வாடியா கிராமத்தில் தலைமுறைகளாக பெண்களை பாலியல் தொழிலில் தள்ளும் கொடுமைக்கு எதிராக தாய்மார்களும் பாட்டிகளும் போராடி வருகின்றனர்.
குஜராத் மாநிலம் பனஸ்காந்தா மாவட்டத்தில் உள்ள வாடியா கிராமத்தில், பெண்களை குடும்பத்தினரே பாலியல் தொழிலில் தள்ளும் கொடூர நடைமுறை பல ஆண்டுகளாக தொடர்வதாக கூறப்படுகிறது. சுமார் 750 பேர் வசிக்கும் இந்த கிராமத்தில், வெளி நபர்களை அழைத்து வந்து சொந்த மனைவி மற்றும் மகள்களையே பாலியல் உறவுக்கு வற்புறுத்தும் அவலம் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு எதிராக தற்போது கிராமத்தைச் சேர்ந்த தாய்மார்களும் பாட்டிகளும் குரல் கொடுத்து வருகின்றனர்.
குடும்பத்தினரே இடைத்தரகர்களாக செயல்படும் அவலம்
அகமதாபாத்தில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாடியா கிராமத்தில், சில ஆண்கள் வழக்கமான வேலைக்குச் சென்று வருமானம் ஈட்டுவதற்குப் பதிலாக குடும்பப் பெண்களை வைத்து பணம் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, காலை நேரத்திலேயே பாலன்பூர் - தாராட் நெடுஞ்சாலைக்கு செல்லும் அவர்கள், அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளை அணுகி, தங்கள் வீட்டுப் பெண்களுடன் பாலியல் உறவு கொள்ள அழைத்துச் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: 10 ஆம் வகுப்பு படித்த மாணவி 2 நாட்களாக மாயம்! தேடி திரிந்த பெட்றோற்கு இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி...! நடந்தது என்ன? போலீஸ் விசாரணை...!!!
தலைமுறைகளை கடந்து தொடரும் பழக்கம்
இந்த நடைமுறை இந்தியா சுதந்திரம் பெற்ற காலகட்டத்திலிருந்தே தொடர்வதாக கூறப்படும் நிலையில், குழந்தை திருமணங்களும் இங்கு நீண்ட காலமாக நடைபெற்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏழு வயது சிறுமிகளுக்குக் கூட நிச்சயதார்த்தம் செய்து, சில ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் செய்து வைக்கும் நிலை இருந்துள்ளது. குடும்பச் சூழல் மற்றும் பாரம்பரியம் என்ற பெயரில் இந்த பழக்கம் தொடர்ந்ததால், பல தலைமுறைகளாக பெண்கள் தங்களின் சுயமரியாதை மற்றும் உரிமைகளை இழக்கும் சூழல் உருவாகியதாக கூறப்படுகிறது.
மகள்களை காப்பாற்ற களமிறங்கிய தாய்மார்கள்
ஆனால், இந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் தற்போது கிராமத்துக்குள் வலுப்பெற்று வருகிறது. தாய்மார்களும் பாட்டிகளும் தங்களது தலைமுறையுடன் இந்த கொடுமை முடிவுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, தங்களது மகள்கள் எந்தச் சூழலிலும் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர். பெண்கள் உரிமை மற்றும் கல்விக்கான விழிப்புணர்வு முயற்சிகளின் தாக்கத்தால், இளம் தலைமுறைச் சிறுமிகளை இந்த நடைமுறையிலிருந்து பாதுகாக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தலைமுறைகளாக வேரூன்றிய ஒரு பழக்கத்தை ஒரே நாளில் மாற்ற முடியாது என்றாலும், வாடியா கிராமத்தின் பெண்களே அதற்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கியிருப்பது மாற்றத்துக்கான முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. தங்கள் மகள்களின் எதிர்காலம் மாற வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய நோக்கமாக உள்ளது. இதன் மூலம் வாடியா கிராமம் தொடர்பான நீண்டகால சமூகப் பிரச்சினைக்கு படிப்படியாக முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.