பெத்த 3 பிள்ளைகளை விட்டுவிட்டு... தாய் 18 வயது இளைஞருடன் ஓட்டம்! குழந்தைகளை வைத்து கதறும் கணவர்..... பவன் எடுத்த அதிரடி முடிவு! பெற்றோர் செய்த தரமான சம்பவம்.!!!
உத்தரப் பிரதேசத்தில் மூன்று குழந்தைகளின் தாயான 38 வயது பெண், 18 வயது இளைஞருடன் வீட்டைவிட்டு சென்றதாக கூறப்படும் விவகாரம் குடும்பத்தினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 38 வயதான திருமணமான பெண்ணும், 18 வயது இளைஞரும் தொடர்புடையதாகக் கூறப்படும் குடும்ப விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட உறவு, பின்னர் குடும்பத்தினர் தலையீடு மற்றும் ஊர்ப் பஞ்சாயத்து வரை சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹரியானாவில் ஒன்றாக வசித்ததாக தகவல்
லக்கிம்பூரைச் சேர்ந்த 18 வயது இளைஞர் பவன், 38 வயதான சுமன் என்பவருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. திருமணமாகி மூன்று குழந்தைகள் இருப்பதை மறைத்துவிட்டு, சுமன் அவருடன் வீட்டைவிட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் இருவரும் ஹரியானாவில் சுமார் மூன்று மாதங்கள் ஒன்றாக வசித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வறுமையால் பிரிந்த காதல் தம்பதிகள்! கைக்குழந்தையுடன் காவல் நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்ட பெண்! பரபரப்பு சம்பவம் !!!
அதன்பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதையடுத்து பவன் தனது சொந்த ஊரான லக்கிம்பூருக்கு திரும்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், சுமன் அவரைத் தேடி அங்கு வந்து கடந்த மூன்று மாதங்களாக தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பஞ்சாயத்திலும் தீர்வு எட்டப்படவில்லை
இதற்கிடையில், சுமனின் கணவர் தனது மூன்று குழந்தைகளுடன் லக்கிம்பூருக்கு வந்து, மனைவியை மீண்டும் குடும்பத்துடன் வருமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் அதற்கு சம்மதிக்காததால், நடைபெற்ற ஊர்ப் பஞ்சாயத்திலும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதையடுத்து கணவர் குழந்தைகளுடன் திரும்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு தரப்பினரின் கருத்து
பவன் தரப்பில், திருமணமாகி குழந்தைகள் இருப்பதை மறைத்ததால் தாம் ஏமாற்றப்பட்டதாகவும், சுமன் தனது சொந்த வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மறுபுறம், பவனின் தந்தை ராஜேந்திரா, சுமன் தற்போது அங்கு தங்க விரும்பினால் தங்களால் தடுக்க முடியாது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.