×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பெரிய வேலையெல்லாம் இல்ல... ஆனால் ஒரு மணி நேரத்திற்கு 20 லட்சம்! சித்தியின் ஆசை வார்த்தை.... இளம்பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!!!

உத்தரபிரதேசத்தின் காஜிப்பூர் மாவட்டத்தில் இளம்பெண்ணை பணம் ஆசை காட்டி பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்த முயன்றதாக சித்தி மற்றும் அவரது கூட்டாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

உத்தரபிரதேச மாநிலம் காஜிப்பூர் மாவட்டத்தில், பணம் ஆசை காட்டி சொந்த அக்கா மகளை பாலியல் சுரண்டல் கும்பலிடம் அனுப்ப முயன்றதாக சித்தி மீது கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பணம் தருவதாக ஆசை வார்த்தை

துல்லஹ்பூர் காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணிடம், அவரது தாயின் சகோதரியான புஷ்பா தேவி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சேர்ந்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு வேலையைச் செய்தால் ரூ.80 லட்சம் கிடைக்கும் என்றும், அதில் ரூ.20 லட்சத்தை இளம்பெண்ணுக்கு வழங்குவதாகவும், மீதித் தொகையை தாங்களே எடுத்துக்கொள்வதாகவும் அவர்கள் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து வீட்டில் யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்றும் எச்சரித்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இரவு முழுவதும் கொஞ்சி கொஞ்சி பேசி உல்லாசமாக இருக்க அழைத்த பெண்! உடனே பந்தாவாக போன தொழிலதிபர் மகனுக்கு காத்திருந்த ட்விஸ்ட்..... திடுக்கிடும் பின்னணி..!!!

சந்தேகமடைந்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி

ஒரே வேலையில் இவ்வளவு பெரிய தொகை கிடைப்பது குறித்து சந்தேகமடைந்த இளம்பெண், அது என்ன வேலை என்று தொடர்ந்து கேட்டுள்ளார். அதற்கு, கார் ஒன்றில் அசம்கார் மாவட்டத்திற்குச் சென்று ஒரு மணி நேரம் மட்டும் இருக்க வேண்டும் எனக் கூறியதுடன், அங்கு ஆபாச செயல்களில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்தை வெளிப்படுத்தியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து இளம்பெண் அந்த திட்டத்தை உடனடியாக மறுத்துள்ளார்.

புகாரின் பேரில் தீவிர விசாரணை

திட்டத்தை ஏற்க மறுத்ததால், புஷ்பா தேவியின் கூட்டாளி இளம்பெண்ணை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அச்சமடைந்த அவர், பெற்றோரிடம் நடந்தவற்றை தெரிவித்து, அவர்களுடன் சேர்ந்து துல்லஹ்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள புஷ்பா தேவி மற்றும் அவரது கூட்டாளியை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை தேடி வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்....! நம்பவச்சு இப்படி பண்ணிட்டானே... கைதான ஏஜென்ட்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Uttar pradesh #Ghazipur #Human Trafficking #பாலியல் சுரண்டல் #police investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story