×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இரவு முழுவதும் கொஞ்சி கொஞ்சி பேசி உல்லாசமாக இருக்க அழைத்த பெண்! உடனே பந்தாவாக போன தொழிலதிபர் மகனுக்கு காத்திருந்த ட்விஸ்ட்..... திடுக்கிடும் பின்னணி..!!!

கர்நாடக மாநிலம் தாவணகெரே பகுதியில் தொழிலதிபரின் மகனை ஹனிட்ராப் மூலம் சிக்கவைத்து பணம் மற்றும் நகைகள் பறித்த கும்பலை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

கர்நாடக மாநிலம் தாவணகெரே பகுதியில் தொழிலதிபரின் மகனை குறிவைத்து நடத்தப்பட்ட ஹனிட்ராப் மோசடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவறான அழைப்பாக தொடங்கிய பழக்கம், பின்னர் பணம் மற்றும் நகை பறிக்கும் திட்டமிட்ட கும்பலின் வலையாக மாறியிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாவணகெரே புறநகர் பகுதியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் 25 வயது மகனுக்கு சில நாட்களுக்கு முன்பு மர்மப் பெண் ஒருவரிடமிருந்து செல்போனில் அழைப்பு வந்துள்ளது. முதலில் அது ‘Wrong Call’ என்று கூறிய அந்தப் பெண், பின்னர் தொடர்ந்து பேசி இளைஞருடன் நெருக்கம் வளர்த்துள்ளார். இரவு முழுவதும் நீடித்த உரையாடல்களால் இருவருக்கும் பழக்கம் அதிகரித்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மசாஜுக்கு ஒத்துழைக்காததால் கத்தி முனையில் கொடுமை.. சென்னையில் திடுக் சம்பவம்.!

தனிமையான இடத்திற்கு வரவழைத்த பெண்

ஒருகட்டத்தில், “நேரில் சந்தித்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம்” என்று ஆசை வார்த்தை கூறி அந்த இளைஞரை தனியாக வருமாறு அழைத்துள்ளார். இதனை உண்மை என நம்பிய இளைஞர், கழுத்தில் தங்கச் சங்கிலி, கையில் விலையுயர்ந்த கடிகாரம், பணம் ஆகியவற்றுடன் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றுள்ளார்.

ஆனால் அங்கு சென்றதும் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்தப் பெண்ணுடன் சேர்ந்து நான்கு பேர் கைகளில் உருட்டுக் கட்டைகளுடன் நின்றிருந்தனர். இளைஞரை சுற்றி வளைத்த அவர்கள், சரமாரியாகத் தாக்கி தங்க நகைகள், பணம், விலையுயர்ந்த கடிகாரம் மற்றும் அவர் வந்த சொகுசு காரையும் பறித்துச் சென்றுள்ளனர்.

புகைப்படம் எடுத்து மிரட்டல்

இதில் மட்டும் நிற்காமல், அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களையும் எடுத்த கும்பல், அவற்றை குடும்பத்தினருக்கு அனுப்பிவிடுவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த இளைஞரிடமிருந்து வங்கிக் கணக்கிலிருந்த பணத்தையும் பறித்துக் கொண்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட இளைஞர் தாவணகெரே புறநகர்க் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் இறங்கினர்.

2 பெண்கள் உட்பட 5 பேர் கைது

இந்த ஹனிட்ராப் கும்பல் மாநில எல்லையைத் தாண்டி தப்புவதற்கு முன்பே போலீஸார் அதிரடியாக நடவடிக்கை எடுத்தனர். இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேரை முதலில் கைது செய்த போலீஸார், பின்னர் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த சுரேஷ் என்பவரையும் கைது செய்தனர்.

விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் தாவணகெரே பகுதியைச் சேர்ந்த பஞ்சமி, ஜெகதீஷ், கங்கா, மல்லேஷ் நாயக் மற்றும் வெங்கடேஷ் என்பது தெரியவந்தது. இதில் முக்கிய குற்றவாளியான பஞ்சமி, தனது பேச்சால் பணக்கார வீட்டு இளைஞர்களை கவர்ந்து வரவழைக்கும் வேலையை செய்து வந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 80 கிராம் தங்க நகைகள், ரூ.10.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் ஒரு சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது கைதானவர்களிடம் போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

இதையும் படிங்க: வேலை வாங்கி தருவதாக இளம்பெண்ணுக்கு விரித்த வலை! வலுக்கட்டாயமாக மதுவை குடிக்க வைத்து... மயக்கமடைந்த பெண்ணை மாறி மாறி 6 மணி நேரம் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Honeytrap #கர்நாடகா #தாவணகெரே #Crime news #police arrest
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story