அடக்கடவுளே... ஆக்சிஜன் மாஸ்க்குடன் குழந்தையை மடியில் வைத்து திணறும் தந்தை! மரண போராட்டத்தில் பிஞ்சு குழந்தை.... உதவி கேட்டு கதறும் தாய்! அதிர்ச்சி வீடியோ....!!!
உத்தரப் பிரதேச அரசு மருத்துவமனைக்கு வெளியே தீவிர நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையுடன் பெற்றோர் நடைபாதையில் அமர்ந்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் போதிய படுக்கை வசதி இல்லாததால், தீவிர நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையுடன் பெற்றோர் மருத்துவமனைக்கு வெளியே நடைபாதையில் அமர்ந்திருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. ரெடிட் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த காட்சிகள் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளன.
வீடியோவில், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தெரியும் குழந்தைக்கு ஆக்சிஜன் மாஸ்க் மற்றும் மருத்துவக் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. குழந்தையை தந்தை நடைபாதையில் அமர்ந்தபடி பிடித்துக்கொண்டிருக்கிறார். அருகில் இருக்கும் தாய், உதவி கேட்டு அழுதபடி வழியாகச் செல்வோரிடம் கெஞ்சும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.
படுக்கை இல்லாததால் நடைபாதையில் சிகிச்சை
மருத்துவமனையில் போதிய படுக்கைகள் மற்றும் அவசர சிகிச்சைக்குத் தேவையான உள்கட்டமைப்பு இல்லாததே குடும்பத்தினர் இவ்வாறு வெளியே காத்திருக்க வேண்டிய நிலைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. குழந்தையின் உடல்நிலை மோசமாக இருந்தபோதிலும், உரிய இடத்தில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.
சமூக வலைதளங்களில் கடும் கண்டனம்
காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனைகளின் வசதிகள் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக, ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அவசர நேரத்தில் உரிய மருத்துவ உதவியைப் பெறுவதில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கொரோனா காலத்தில் வெளிப்பட்ட சுகாதாரக் கட்டமைப்பு குறைபாடுகளை இந்தக் காட்சி மீண்டும் நினைவூட்டுவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மருத்துவ சிகிச்சை கிடைப்பதில் பண வசதி முக்கிய காரணியாக மாறக்கூடாது என்றும், அரசு மருத்துவமனைகளில் படுக்கை மற்றும் அவசர சிகிச்சை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.