19 வயது பெண்ணை காரில் வலுக்கட்டாயமாக கடத்தி சென்ற இளைஞர்! மக்கள் தடுத்தும் நிற்காமல் பறந்த கார்... சில மணி நேரத்தில் மாயமான பெண் வெளியிட்ட வீடியோ! பகீர் சம்பவம்..!!!
மத்தியப் பிரதேசம் உஜ்ஜைனில் இளம்பெண் காரில் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டதாக எழுந்த புகாரில், திருமணம் செய்ததாக வெளியான வீடியோவால் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனில் 19 வயது இளம்பெண் ஒருவர் இளைஞரால் வலுக்கட்டாயமாக காரில் அழைத்துச் செல்லப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான CCTV காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இளம்பெண்ணை மீட்க அப்பகுதி மக்கள் காரை தடுத்து நிறுத்த முயன்ற காட்சிகளும் பதிவாகியிருந்தன.
சிசிடிவி காட்சிகளால் தொடங்கிய விசாரணை
காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். இளம்பெண்ணை அழைத்துச் சென்றதாக கூறப்பட்ட இளைஞர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரையும் இளம்பெண்ணையும் கண்டுபிடிக்க தேடுதல் பணி தொடங்கியது. சம்பவம் தொடர்பாக கிடைத்த தகவல்களை போலீசார் தொடர்ந்து சேகரித்தனர்.
இதையும் படிங்க: பார்த்து போங்க மக்களே...! டிப்பர் லாரி ஸ்கூட்டர் மீது மோதி தூக்கி வீசப்பட்டு துடிதுடித்து இறந்த வாலிபர்! அதிர்ச்சி வீடியோ...!!!
சில மணி நேரத்தில் வெளியான வீடியோ
இந்நிலையில், சில மணி நேரங்களுக்குப் பிறகு சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. அதில் இளம்பெண்ணும் குற்றம் சாட்டப்பட்ட இளைஞரும் ஒன்றாக தோன்றினர். இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும், தனது விருப்பத்துடனேயே அவருடன் சென்றதாகவும் இளம்பெண் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உண்மை பின்னணியை ஆய்வு செய்யும் போலீசார்
எனினும், ஆரம்பத்தில் பதிவான புகார் மற்றும் CCTV காட்சிகள் காரணமாக வழக்கு ஏற்கனவே காவல்துறை விசாரணைக்கு வந்துள்ளது. தற்போது வெளியான வீடியோவில் கூறப்பட்ட தகவல்கள், இருவருக்கும் இடையிலான உறவு மற்றும் சம்பவம் நடைபெற்ற விதம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் போலீசார் சரிபார்த்து வருகின்றனர். விசாரணையின் முடிவிலேயே கடத்தல் புகாரின் முழு பின்னணி தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.