தாயுடன் ஏற்பட்ட தகராறு..! ஆத்திரம் தாங்காமல் குத்தி கொன்ற 20 வயது மகன்...! ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்த தாய்... பகீர் சம்பவம்..!!!
தெலுங்கானா ஹனம் கொண்டாவில் தாயின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மகன் கத்தியால் தாக்கியதில் 40 வயது பெண் உயிரிழந்தார். மகனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் ஹனம் கொண்டா மாவட்டம் காசிப்பேட்டையில் தாயை மகனே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டி.ஜி.ஐ.எல் காலனி பகுதியில் இந்த கொலை நடந்துள்ளது. உயிரிழந்தவர் 40 வயதான உதயஸ்ரீ என அடையாளம் காணப்பட்டுள்ளார். கொலை தொடர்பாக அவரது 20 வயது மகன் தொரபாபுவை போலீசார் கைது செய்துள்ளனர்.
தாயுடன் ஏற்பட்ட தகராறு விபரீதமானது
உதயஸ்ரீயின் நடத்தையில் தொரபாபுவுக்கு சந்தேகம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில், மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த தொரபாபு, தான் வைத்திருந்த கத்தியால் தாயை சரமாரியாக குத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இப்போ தாண்டா எனக்கு நிம்மதி... 4 மாத கர்ப்பிணி தங்கையை கொன்ற கணவரை... 7 மாதங்களுக்கு பிறகு தீர்த்து கட்டிய அண்ணன்! பகீர் சம்பவம்..!!!
ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த பெண்
கத்திக்குத்தில் பலத்த காயமடைந்த உதயஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் கிடைத்ததும் காசிப்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மகன் கைது; போலீசார் விசாரணை
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தொரபாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. குடும்பத் தகராறு எந்தச் சூழலில் கொலையாக மாறியது என்பது தொடர்பாகவும் போலீசார் தொடர்ந்து தகவல்களை சேகரித்து வருகின்றனர். இதனால் டி.ஜி.ஐ.எல் காலனி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இப்போ தாண்டா எனக்கு நிம்மதி... 4 மாத கர்ப்பிணி தங்கையை கொன்ற கணவரை... 7 மாதங்களுக்கு பிறகு தீர்த்து கட்டிய அண்ணன்! பகீர் சம்பவம்..!!!