×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இப்போ தாண்டா எனக்கு நிம்மதி... 4 மாத கர்ப்பிணி தங்கையை கொன்ற கணவரை... 7 மாதங்களுக்கு பிறகு தீர்த்து கட்டிய அண்ணன்! பகீர் சம்பவம்..!!!

தெலுங்கானாவில் கர்ப்பிணி தங்கையை கொன்ற கணவரை, 7 மாதங்களுக்குப் பிறகு அண்ணன் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தெலுங்கானாவில் கர்ப்பிணி தங்கையை கொன்ற கணவரை, 7 மாதங்களுக்குப் பிறகு அவரது அண்ணன் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜக்தித்யால் மாவட்டத்தைச் சேர்ந்த யூடியூபர் வைஷ்ணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜாமீனில் வெளியே வந்திருந்த ஹரிபிரசாத், நிஜாமாபாத் பகுதியில் கொல்லப்பட்டார்.

மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான வைஷ்ணவி, பிரபல யூடியூபராக இருந்து வந்தார். கடந்த 2025 மார்ச் மாதம் 4 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவரது காதல் கணவர் ஹரிபிரசாத் கழுத்தை நெரித்தும் கத்தியால் குத்தியும் கொலை செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இதையும் படிங்க: கலிகாலம்... 5 வயது சிறுமிக்கு சொந்த இரத்த உறவே செய்த கொடூரம்! செருப்பால் வெளுத்து எடுத்த பொதுமக்கள்.... அதிர்ச்சி சம்பவம்!!!

ஜாமீனில் வெளியே வந்த கணவர்

கொலை வழக்கில் சிறையில் இருந்த ஹரிபிரசாத் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். இதையடுத்து நிஜாமாபாத் பகுதியில் தங்கியிருந்த அவர், செப்டம்பர் 17 அன்று கிரீன் கிராஸ் சாலையில் சென்றுகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த வைஷ்ணவியின் அண்ணன் சந்தோஷ், தங்கையை கொன்ற ஆத்திரத்தில் ஹரிபிரசாத்தை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

வீடியோ வெளியிட்டு காவல் நிலையத்தில் சரண்

கொலைக்குப் பிறகு அங்கிருந்து தப்பிச் சென்ற சந்தோஷ், தனது தங்கையை கொன்றவரை பழிவாங்கியதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், தங்கையை கொன்றவரை தான் கொன்றுவிட்டதாகவும், இனி பெண்கள் மீது கை வைக்க மற்றவர்கள் அஞ்ச வேண்டும் என்றும் பேசியிருந்தார்.

இதையடுத்து செப்டம்பர் 19 அன்று சந்தோஷ் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார், கொலை தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கர்ப்பிணி பெண் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த கணவர், பின்னர் பழிவாங்கும் கொலைக்கு ஆளானது தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்கையை இழந்த ஆத்திரத்தில் அண்ணன் நடத்திய இந்தப் பழிவாங்கும் கொலை தொடர்பாக போலீசார் அடுத்தகட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இரு கொலைகளின் பின்னணி மற்றும் வழக்கின் சட்ட நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகள் தகவல்களை சேகரித்து வருகின்றனர். தெலுங்கானா பழிவாங்கும் கொலை சம்பவம் அப்பகுதியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

இதையும் படிங்க: வீட்டின் வெளியே ஏதோ கேட்ட சத்தம்...! வெளியே வந்த பார்த்த பாட்டி.... நொடியில் வந்து உயிரைப் பறித்த எமன்...! நெஞ்சை நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி...!!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#தெலுங்கானா கொலை #Vaishnavi Murder #ஹரிபிரசாத் #சந்தோஷ் #Telangana Crime
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story