தமிழக அரசு ஊழியர்களுக்கு அடித்த மிகப்பெரிய ஜாக்பட் ! அரசு வெளியிட்ட 10 நலத்திட்டங்கள்! முழு விவரம் இதோ...
தமிழக அரசு ஊழியர்களுக்கு அடித்த மிகப்பெரிய ஜாக்பட் தான் இது! அரசு வெளியிட்ட 10 நலத்திட்டங்கள்! முழு விவரம் இதோ...
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் குறித்த பல முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகிறது. இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து மட்டும் அரசு ஊழியர்களுக்காக பல நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை பதவி உயர்வு, ஊதிய உயர்வு, முன்பண உதவிகள் போன்றவையாக இருக்கும். இங்கே அந்த 10 முக்கிய அறிவிப்புகள் குறித்த முழுமையான தகவல்களை காணலாம்.
அரசு ஊழியர்களுக்கான 10 முக்கிய நல அறிவிப்புகள்:
1. போக்குவரத்து ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு
தமிழ்நாடு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 15வது ஊதிய ஒப்பந்தத்தின் கீழ் 6% ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 1.09 லட்சம் ஊழியர்கள் இதனால் நன்மை பெறுகின்றனர்.
இதையும் படிங்க: விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை! திடீரென காணவில்லை! தேடிய தாய்... தெரிந்த கால்! அதிர்ச்சிகரமான சம்பவம்...
2. டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2000 சம்பள உயர்வு
ஏப்ரல் 1, 2025 முதல் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2000 வரை சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலே ரூ.1000 அடிப்படையில் மற்றும் மற்றொரு ரூ.1000 வேலை திறனின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
3. ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 ஆக உயர்வு
இதற்கு முன் ரூ.500 இருந்ததைவிட, இப்போது ஆண்டுதோறும் பொங்கலுக்கு ரூ.1000 பரிசுத்தொகையாக வழங்கப்படுகிறது.
4. பண்டிகை முன்பணம் ரூ.6000 ஆக உயர்வு
ஓய்வூதியதாரர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.4000 இருந்தது, தற்போது ரூ.6000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
5. தகுதிக்காண் கால மகப்பேறு விடுப்பு
Probation காலத்திலும் மகப்பேறு விடுப்பு சர்வீஸ் காலமாக கருதி, பதவி உயர்வில் பாதிப்பு இல்லாமல் அரசு உத்தரவிட்டுள்ளது.
6. இலவச ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு திட்டம்
இந்தியாவில் முதன்முறையாக, அரசு ஊழியர்களுக்காக இலவச காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
7. அகவிலைபடி (DA) 2% உயர்வு
மத்திய அரசின் அடிப்படையில், 2% DA உயர்வு 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நன்மை அளிக்கிறது.
8. பண்டிகை கால முன்பணம் – ரூ.20,000 வரை
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பண்டிகைக்கு முன்பணமாக ரூ.20,000 வரை பெறலாம்.
9. கல்வி முன்பண உச்சவரம்பு உயர்வு
முதுகலை: ₹1.5 லட்சம்
டிப்ளோமா: ₹1 லட்சம்
கலை, அறிவியல்: ₹50,000
10. திருமண முன்பணம் ரூ.5 லட்சம் வரை
அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கான திருமணத்திற்கு முன்பணம் ரூ.5 லட்சம் வழங்கப்படும்.
இந்த அறிவிப்புகள் அனைத்தும் தமிழக அரசு ஊழியர்கள் நலனுக்காக எடுக்கப்பட்ட சிறப்பான தீர்மானங்கள். மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, ஊழியர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் தொடர்ந்து புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: மக்களே உஷார்! தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களில் வெளுக்க போகும் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...