விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை! திடீரென காணவில்லை! தேடிய தாய்... தெரிந்த கால்! அதிர்ச்சிகரமான சம்பவம்...
விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை! திடீரென காணவில்லை! தேடிய தாய்... தெரிந்த கால்! கதறி துடித்த தாய்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டு ஊராட்சி காட்டுப்புத்தூர் காலனியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு வசித்து வரும் கூலித் தொழிலாளி பழனியின் 2 வயது மகன் முகிலன், வீட்டருகே உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்பது அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பழனியின் மனைவி பார்கவிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகள் பிரவீனா தற்போது 1ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவன் முகிலன் வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று சிறிது நேரம் கழித்து வந்த தாய் பார்கவி, முகிலனை மூச்சுத்திணறி மயங்கி கிடக்கும் நிலையில் கண்டார். உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக உறுதிப்படுத்தினர்.
இதையும் படிங்க: மக்களே உஷார்! தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களில் வெளுக்க போகும் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...
இந்த சம்பவம் தொடர்பாக கலசபாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உள்ளூர் மக்கள் மத்தியில் இந்த துயரச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கணவர் இறந்த துக்கதில் அடுத்த நொடியே மயங்கி விழுந்து மனைவி! இறப்பிலும் இணைபிரியாத தம்பதியினர்! நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்...