காணாமல் போன 6 வயது சிறுமி வனப்பகுதியில் சடலமாக மீட்பு..! அண்டை வீட்டு சிறுவன் செய்த அதிர்ச்சி.. சிசிடிவியால் வெளிவந்த பகீர் உண்மை..!!!
உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தில் காணாமல் போன 6 வயது சிறுமி வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மைனர் சிறுவன் பிடிபட்டுள்ள நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் காணாமல் போன 6 வயது சிறுமி, வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சஹாபாத் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், சிறுமியின் அண்டை வீட்டில் வசிக்கும் மைனர் சிறுவனைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி
ராம்பூர் மாவட்டம் சஹாபாத் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி காணாமல் போனதைத் தொடர்ந்து, குடும்பத்தினர் அவரைத் தேடி வந்தனர். இந்த நிலையில், லக்கி பாக் வனப்பகுதியில் சிறுமி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது உடலில் காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் மைனர் சிறுவன் பிடிபட்டார்
போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியின் அண்டை வீட்டில் வசிக்கும் மைனர் சிறுவன் மீது சந்தேகம் ஏற்பட்டது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்தச் சிறுவன் சிறுமியை வனப்பகுதிக்கு அழைத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்துள்ளது . இதையடுத்து அவரைத் தடுப்புக் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் சிறுமியைக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருப்பு
சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டு இதுவரை உறுதி செய்யப்படவில்லை. சிறுமியின் மரணத்திற்கான துல்லியமான காரணத்தையும், பாலியல் வன்கொடுமை நடந்ததா என்பதையும் அறிய பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மனுஷனா நீ..? புத்தகத்தை எடுக்கச் சென்ற 16 வயது மாணவியிடம் அத்துமீறிய பியூன்..! அலறி துடித்த மாணவி... சிக்கிய சிசிடிவி காட்சி..!!!