×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கணவனின் கனவு வீட்டில் தொடங்கிய ரகசிய உறவு! பெயிண்ட் அடிக்க வந்த பெயிண்டருடன் மனைவி இருந்த அந்த கோலம்... கணவனுக்கு நேர்ந்த பயங்கரம்..! இறுதியில் அம்பலமான் அதிர்ச்சி பின்னணி..!!!

கர்நாடகாவின் விஜயபுராவில் ராஜசேகர் பிராதர் சாலை விபத்தில் உயிரிழந்த வழக்கில் சிசிடிவி காட்சிகள் மூலம் கொலை அம்பலமானது. மனைவி, பெயிண்டர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில், சாலை விபத்தில் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட நபர் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. ராஜசேகர் பிராதர் என்பவர் உயிரிழந்த வழக்கில் அவரது மனைவி, வீட்டுக்கு வண்ணம் தீட்ட வந்த பெயிண்டர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, விபத்து போல சித்தரிக்கப்பட்ட கொலையின் பின்னணி வெளிச்சத்துக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

கனவு வீட்டில் தொடங்கிய ரகசிய உறவு

ராஜசேகர் தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். சுமார் 7 மாதங்களுக்கு முன்புதான் அவர் ஆசையாகக் கட்டிய புதிய வீட்டின் பணிகள் முடிந்தன. அந்த வீட்டுக்கு வண்ணம் தீட்டுவதற்காக சுமார் 25 வயதுடைய பெயிண்டர் ஒருவர் வந்துள்ளார். ராஜசேகர் பகல் நேரத்தில் வேலைக்குச் சென்றுவிடுவதால், அந்த நேரத்தில் பெயிண்டர் வீட்டில் வேலை செய்து வந்ததாகத் தெரிகிறது.

இதையும் படிங்க: வெளிநாட்டிலிருந்து வந்த கணவனுக்கு உண்மை தெரிந்திடுமோ..! இரவில் தூங்கிய கணவனுக்கு நடந்த அதிர்ச்சி! மனைவியின் மகா நடிப்பு நாடகம்... கால் ரெக்கார்ட்டில் சிக்கிய உண்மை பின்னணி...!!!

இந்தச் சூழலில், ராஜசேகரின் மனைவிக்கும் பெயிண்டருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையிலான உறவை ராஜசேகர் நேரில் பார்த்ததாகவும், இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிசிடிவி காட்சிகளில் சிக்கிய எண் பலகை இல்லாத கார்

இதற்கிடையே, ராஜசேகர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். முதலில் இது விபத்து என்றே கருதப்பட்டது. ஆனால், சம்பவ இடத்தைச் சுற்றியிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், எண் பலகை இல்லாத ஸ்கார்பியோ கார் ராஜசேகர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதை கவனித்தனர். இதையடுத்து, திட்டமிட்டு மோதியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

மனைவி, பெயிண்டர் உட்பட 6 பேர் கைது

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ராஜசேகரின் மனைவியும் பெயிண்டரும் இணைந்து கொலைக்குத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், சிலரின் உதவியுடன் விபத்து போலக் காட்டி ராஜசேகரைக் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் ராஜசேகரின் மனைவி, பெயிண்டர் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் 4 பேர் என மொத்தம் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சாலை விபத்து எனத் தொடங்கிய விசாரணை, சிசிடிவி ஆதாரங்களால் திட்டமிட்ட கொலை வழக்காக மாறியுள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

இதையும் படிங்க: மனுஷனா நீ..? புத்தகத்தை எடுக்கச் சென்ற 16 வயது மாணவியிடம் அத்துமீறிய பியூன்..! அலறி துடித்த மாணவி... சிக்கிய சிசிடிவி காட்சி..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#விஜயபுரா கொலை #ராஜசேகர் பிராதர் #கர்நாடகா Crime News #மனைவி கைது #CCTV investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story